17 ஆண்டுகளுக்குப் பிறகு, டாடா குழுமம் துவங்கிய ஏர் இந்தியா மீண்டும் தாய் வீட்டுக்குத் திரும்பிய ஒரு வருடத்திலேயே ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் தனக்குச் சாதமாக மாற்றிக்கொண்டு ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் மொத்தம் 470 விமானங்களுக்கான ஆர்டர் செய்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை இந்திய விமானச் சேவை நிறுவனத்தால் வாங்கப்பட்ட மிகப்பெரிய ஆர்டராக இது உள்ளது, இதோடு உலகின் மிகப்பெரிய ஒற்றை விமான ஆர்டர்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்குப் போட்டியாக இந்தியாவின் பிற விமானச் சேவை நிறுவனங்களும் விமானங்களை ஆர்டர் செய்து தயாராக உள்ளது. இதனால் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CAPA அமைப்பு
விமானப் போக்குவரத்துத் துறை கண்சல்டன்சி சேவை நிறுவனமான CAPA அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 2 வருடத்தில் இந்திய விமான நிறுவனங்கள் 1500 முதல் 1700 விமானங்களை ஆர்டர் செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
இண்டிகோ
இந்தியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமாக இருக்கும் IndiGo ஏற்கனவே சுமார் 500 விமானங்களை ஆர்டர் செய்திருக்கிறது. ஏர் இந்தியாவில் தற்போதைய போட்டி இண்டிகோ-விட அதிக வர்த்தகம் பெற வேண்டும் என்பது தான்.
ஆகாசா ஏர்
புதிதாக இந்திய ஏவியேஷன் சந்தைக்குள் வந்த Akasa Air 72 Boeing narrow-body விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இந்த 72 விமானங்களில் 16 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆகாசா ஏர் 56 விமானங்களை ஆர்டர் செய்து காத்திருக்கிறது.
கோ ஃபர்ஸ்ட்
இதற்கு முன்னதாகக் கோ ஏர் என அழைக்கப்பட்ட கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சுமார் 72 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் விஸ்தாரா ஏற்கனவே 17 போயிங் விமானங்களை ஆர்டர் செய்து பெற உள்ளது.
1,115 விமானங்கள் ஆர்டர்
இப்படி ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், கோ ஃபர்ஸ்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய இந்தி விமான நிறுவனங்களில் குறைந்தது 1,115 விமானங்கள் ஆர்டர் செய்து காத்திருக்கிறது. இந்த விமானங்கள் டெலிவரி செய்யப்படக் குறைந்தது 5 வருடம் ஆகலாம்.
700 வணிக விமானங்கள்
தற்போது இந்தியாவில் சுமார் 700 வணிக விமானங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை narrow-body விமானங்கள். இதில் சுமார் 470 ஏர்பஸ் விமானங்களும், 159 போயிங் விமானங்களும் வர்த்தகச் சேவையில் உள்ளன.
20 வருட டிமாண்ட்
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதனால் அடுத்த இரண்டு தசாப்தங்களில் அதாவது 20 வருடத்தில் இந்தியாவிற்குச் சுமார் 2,210 புதிய விமானங்கள் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
இதை உறுதி செய்யும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சேவை துறைக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 2,000 விமானங்கள் தேவைப்படும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications