வங்கி வேலைக்காக காத்திருக்கீங்களா.. வந்து குட்நியூஸ்.. 2500 பேருக்கு இந்தியன் வங்கியில் வேலை ரெடி..!

இந்திய வங்கி துறை ஏஐ, டிஜிட்டல் சேவை, ஆட்டோமேஷன் மூலம் பல முக்கிய சேவைகளை எளிதாக்கிய காரணத்தால் வங்கிகள் தற்போது தனது வர்த்தகத்தை மிக குறைவான செலவில் வர்த்தகக்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. புதிய புதிய பகுதிகளில் வர்த்தகத்தை கொண்டு செல்கிறது.

அந்த வகையில் 1907 ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்டு, 1969 முதல் இந்திய அரசின் கட்டப்பாட்டில் இயங்கி வரும் இந்தியன் வங்கி நடப்பு நிதியாண்டுக்குள் 100 புதிய வங்கி வங்கி கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளது.

வங்கி வேலைக்காக காத்திருக்கீங்களா.. வந்து குட்நியூஸ்.. 2500 பேருக்கு இந்தியன் வங்கியில் வேலை ரெடி..!

இந்த முறை தனது விரிவாக்கத்தை தென்னிந்தியாவை தாௌண்டி மத்திய மற்றும் மேற்கு பகுதியில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு சுமார் 2500 பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க உள்ளது.

இந்த 2500 ஊழியர்கள் புதிதாக திறக்கப்படும் வங்கி கிளைக்கு மட்டும் அல்லாமல் புதிய வர்த்தக பிரிவு, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பதிலாக நிரப்பவும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுக்குறித்து இந்தியன் வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் பினோத் குமார் கூறுகையில் கடந்த ஆண்டு 100 வங்கி கிளைகளை திறந்தது போல் இந்த ஆண்டும் இதேபோன்ற இலக்கை வைத்துள்ளோம். மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 புதிய கிளைகளை திறந்தோம் என்றும் தெரிவித்தார்.

ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 6003 வங்கி கிளைகளும், வெளிநாடுகளில் சிங்கப்பூர், கொலும்பு, ஜாப்னா ஆகிய பகுதிகளில் 3 கிளைகளும், 41,875 ஊழியர்களை வைத்து இயங்கி வருகிறது.

இந்தியாவில் 7வது பெரிய வங்கியாக இருக்கும் இந்தியன் வங்கி, 2020 அலகாபாத் வங்கியை இணைத்து மூலம் கிழக்கு மற்றும் உத்தர பிரதேசத்தில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த நிலையில் தற்போது மத்திய மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் விரிவாக்கம் செய்த தயாராகியுள்ளது.

மற்ற வங்கிகளை போலவே இந்தியன் வங்கியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்க நகை கடன் போர்ட்போலியோ 1.5 லட்சம் கோடி வரையில் அதிகரிக்கும் என கணக்கிட்டு உள்ளது. இதேபோல் இவ்வங்கியிஸ் வாராக் கடன் 1.5 -1.6 சதவீகமாக உள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்திய வங்கி பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 0.80 சதவீதம் சரிந்து 877.35 ரூபாயாக உள்ளது, 2026ஆம் ஆண்டில் 8 மாத காலத்தில் 5.37 சதவீதம் உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+