டெல்லி: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
இந்த வரிகுறைப்பானது ஜனவரி 3, 2020 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு ஆண்டுக்கான எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.35 சதவிகிதத்திலிருந்து, 8.30 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதே ஒவர் நைட் விகிதமானது 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.90 சதவிகிதமாகவும், இதே ஒரு மாதத்திற்கான எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.05 சதவிகிதத்திலிருந்து, 8 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதே மூன்று மாதத்திற்கான எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.15 சதவிகிதமாகவும், ஆறு மாத எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.20 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது.
சமீபத்தில் அரசுக்கு சொந்தமான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கியும் தங்களது கடன்களுக்கான அடிப்படை விகிதத்தினை குறைத்துள்ளன. மேலும் இதுதவிர பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் எம்.சி.எல்.ஆரை 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ், கடந்த டிசம்பர் 5ம் தேதி மீண்டும் வட்டியை குறைக்க அவசியம் இல்லை. இதுவரை வட்டி குறைப்பு செய்த விகிதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் கூறினார்.
இந்த நிலையில் ரிசர்வ வங்கி ரெபோ விகிதத்தினை குறைக்காவிட்டாலும், வங்கிகள் தற்போது வட்டி விகிதத்தினை குறைக்க ஆரம்பித்துள்ளன. இது தற்போது இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையை போக்க பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கான வட்டி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்களின் நுகர்வை அதிரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே வீட்டுக்கடன், வாகனக் கடன் வாங்கியிருப்பவர்கள், இதன் மூலம் பெரிதும் பயன் அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாத மாதம் செலுத்த வேண்டிய கடன் தொகை சற்று குறையும் என்றும் கருதப்படுகிறது. எப்படியோங்க சத்தமேயில்லாமல் மக்களுக்கு தேவையான வட்டி குறைப்பினை செய்துள்ளது இந்தியன் வங்கி. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications