சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியை அண்மையில் குறைத்தது. கடந்த வாரம் மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது.
ரெப்போ வட்டி குறைப்பு: கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை ரிசர்வ் வங்கி 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக நாம் வாங்கிய வீட்டுக் கடன்கள் மற்றும் வாகன கடன்களின் வட்டிகள் குறைந்துள்ளன. அதே வேளையில் வங்கிகளில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியன் வங்கி: அந்த வகையில் இந்தியாவில் முன்னணி பொதுத்துறை வங்கியாக செயல்படக்கூடிய இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மீதான வட்டியை குறைத்து இருக்கிறது. இது தொடர்பாக இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மீது தாங்கள் வழங்கி வந்த வட்டியில் 0. 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஜூன் 9ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்திருப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வளவு வட்டி குறைப்பு: 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.1 % வட்டி வழங்கப்பட்ட நிலையில் அதனை 6.6 % என குறைத்துள்ளது. 444 நாட்கள் என்ற சிறப்பு டெபாசிட் திட்டங்களுக்கு இந்தியன் வங்கி இதுவரை 7.15% வட்டி வழங்கி வந்தது அதனை 6.9% ஆக குறைத்து இருக்கிறது. 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.7 % வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 6.40% என குறைத்துள்ளது.
5 ஆண்டுகாலம் கொண்ட டெபாசிட் திட்டங்களுக்கு 6.25 % வட்டி வழங்கப்பட்ட நிலையில் அது 6 % என குறைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.10%இல் இருந்து 6% என குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி: இந்தியன் வங்கி மட்டுமல்ல பல்வேறு வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன . ஹெச்டிஎஃப்சி வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை குறைத்துள்ளது. குறைந்தபட்சம் 3 % முதல் 6.85% என வட்டி வழங்கிய நிலையில் அதனை தற்போது குறைந்த பட்சம் 2.75 %முதல் 6.60% என குறைத்துவிட்டது. அதேபோல சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கி வந்த வட்டியும் 2.75 % என குறைக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி: ஐசிஐசிஐ வங்கியும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டியை குறைத்துள்ளது. இதன்படி 3 கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள டெபாசிட்களுக்கு 3% முதல் 6.6% என குறைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.1% வரை குறைத்து அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications