இந்திய வங்கித்துறை அதிகரித்து வரும் வாராக் கடன், முதலீடுகள் வெளியேற்றம், வங்கிக் கடன் மோசடி, அடுத்தது வங்கிகள் திவாலாகும் நிலையிலும், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து 2020-21 நிதியாண்டு காலத்தில் வங்கித் துறை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
இது வரலாற்று உச்சம் என்பது தான் தற்போது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று அதிகமாக இருந்த 2021ஆம் நிதியாண்டில் தான் வர்த்தகச் சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.
இந்த நிலையிலும் வங்கிகள் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்திய வங்கித்துறை
இந்திய வங்கித்துறை 2019ஆம் நிதியாண்டில் சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்த வேளையில், 2021ஆம் நிதியாண்டில் 1,02,252 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி
இந்திய வங்கித்துறையின் மொத்த லாபத்தில் 50 சதவீதம் லாபத்தை ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய இரு வங்கிகள் மட்டுமே அளித்துள்ளது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி 18 சதவீத வளர்ச்சியில் 31,116 கோடி ரூபாயும், எஸ்பிஐ வங்கி 20,410 கோடி ரூபாயும் அளித்துள்ளது.
3வது இடத்தில் ஐசிஐசிஐ வங்கி கடந்த வருடத்தை விடவும் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்து சுமார் 16,192 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
தனியார் வங்கிகள் ஆதிக்கம்
கொரோனா பாதிப்பின் காரணமாகவும், அதீத வாராக் கடன் வாயிலாகவும் 2021ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் தனது கடன் வர்த்தகத்தைக் குறைத்துக் கொண்ட நிலையில் தனியார் வங்கிகள் முந்திக்கொண்டது. இதனால் இந்திய வங்கித்துறையின் சந்தை ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
அனைத்தையும் தாண்டி 5 வருடத்திற்குப் பின்பு முதல் முறையாகப் பொதுத்துறை வங்கிகள் மொத்தமாகச் சேர்ந்து லாபத்தை அடைந்துள்ளது. 12 பொதுத்துறை வங்கிகளில் வெறும் 2 வங்கிகள் மட்டுமே 2020-21 நிதியாண்டில் நஷ்டத்தை அளித்துள்ளது. பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா 2020-21ஆம் நிதியாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications