அமெரிக்காவை கண்டு பயப்படும் இந்தியா.. ரஷ்யா உடன் ரூபாய் வர்த்தக திட்டம் நிறுத்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதைச் சரி செய்யும் விதமாக இந்தியா - ரஷ்யா உடனான அனைத்து வர்த்தகத்தையும் இந்திய ரூபாயில் மதிப்பில் செய்ய இரு நாடுகளும் முடிவு செய்து அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வங்கி மட்டம் வரையில் அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்திய வங்கிகள் பின்வாங்கத் துவங்கியுள்ளது.

என்ன காரணம் தெரியுமா...?

உலக நாடுகளுக்கு பிரச்சனையாக அமையும் அமெரிக்க டாலரின் வளர்ச்சி.. என்னவாகுமோ? உலக நாடுகளுக்கு பிரச்சனையாக அமையும் அமெரிக்க டாலரின் வளர்ச்சி.. என்னவாகுமோ?

இந்தியா - ரஷ்யா

இந்தியா - ரஷ்யா

இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் உக்ரைன் போருக்குப் பின்பு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் நிலையில், அதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இரு நாடுகளும் ரூபாய் - ரூபிள் நாணயத்தில் வர்த்தகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்தியாவின் பெரிய வங்கிகள் ரஷ்யாவிலும், ரஷ்யாவின் பெரிய வங்கிகள் இந்தியாவிலும் வங்கிக் கணக்குத் திறந்தது.

ரூபாய் - ரூபிள் நாணய வர்த்தகம்

ரூபாய் - ரூபிள் நாணய வர்த்தகம்

எல்லாம் தயாராக இருக்கும் நிலையில் இந்திய வங்கிகள் ரஷ்யா உடன் டாலர், யூரோ அல்லாமல் ரூபாய் - ரூபிள் நாணயத்தில் வர்த்தகம் செய்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தடை விதிக்குமோ என்ற அச்சத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தாமல் வைத்துள்ளது.

8 பெரிய வங்கிகள்

8 பெரிய வங்கிகள்

இந்தியா அளிக்க வேண்டிய 8 பெரிய வங்கிகள் செட்டில்மென்ட் தொகை ரூபாயில் செலுத்த ரஷ்ய வங்கிகள் கோரிக்கை விடுத்தும் இந்திய வங்கிகள் தற்போது எவ்விதமான பதிலும் அளிக்க முடியாமல் உள்ளது.

பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள்

இந்த 8 வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளும் இதில் அடக்கம். இந்த ரூபாய் - ரூபிள் வர்த்தக முறையை இப்போதைக்குப் பயன்படுத்த வேண்டாம் என இந்திய வங்கிகள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்களும் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ரஷ்யா உடன் ரூபாயில் வர்த்தகம் செய்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எங்கள் மீது தடை விதிக்கலாம்.

வர்த்தகம், மதிப்பு இழப்பு

வர்த்தகம், மதிப்பு இழப்பு

இப்படிச் செய்தால் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் மதிப்பு இழப்பு ஏற்படும் எனத் தெரிவிப்பதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ள இந்திய வங்கிகள் தொடர்ந்து டாலர் அல்லது யூரோ நாணயத்தின் கீழ் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.

யெஸ் வங்கி, யூகோ வங்கி

யெஸ் வங்கி, யூகோ வங்கி

இதனால் தற்போது யெஸ் வங்கி மற்றும் யூகோ வங்கி மட்டுமே ரஷ்யாவின் PSCB மற்றும் Gazprombank உடன் ரூபாயில் வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் எப்போது ரூபாய் - ரூபிள் நாணயங்கள் வாயிலாக வர்த்தகம் செய்யும் எனத் தெரியாமல் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian banks worried USA, UK may put sanctions on rupee trade with Russia

Indian banks worried USA, UK may put sanctions on if trade with Russia in Indian rupee so shun the rupee settlement mechanism for now
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X