இந்திய வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த 2020-21ஆம் நிதியாண்டில் வங்கிகள் சுமார் 1.53 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்தி வைத்துள்ளது (Write off).
பொதுவாகக் கடன் செலுத்த முடியாதவர்களின் கடனை வாராக் கடனாக அறிவிக்கப்படும், ஆனால் சிலர் வாங்கிய கடனை குறித்த காலகட்டத்தில் திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் அதை வங்கிகளின் வருடாந்திர கணக்குகளில் இருந்து தனியாக ஒதுக்கிவைப்பதே இந்தக் கடன் ஒத்திவைப்பு.

இதன் மூலம் வங்கிகளின் தனது நிதிநிலையை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் வசூலிக்க முடியாத கடன் மீது தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
2018-19ஆம் நிதியாண்டில் இந்திய வங்கிகள் சுமார் 2.54 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்தது. அதன் பிறகு தற்போது தான் அதிகப்படியான தொகையை அதாவது 1.53 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒதுக்கி வைத்துள்ளது.
தற்போது நிலவரத்தின் படி பாங்க் ஆப் இந்தியா தனது 37 சதவீத கடனை வசூலிக்க முடியாமல் உள்ளது, இதைத் தொடர்ந்து பாங்க் ஆப் பரோடா 7 சதவீதம், ஐசிஐசிஐ வங்கி 15.7 சதவீதமாக உள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் யெஸ் வங்கி ரூ.17,208 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ.13,906 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.8,732 கோடியும், டிசிபி வங்கி ரூ.126 கோடியும், சென்டரல் பேங்க் ஆப் இந்தியா ரூ.5,992 கோடியும், கர்நாடகா வங்கி ரூ.1,153 கோடியும், ஐடிபிஐ வங்கி ரூ.8,392 கோடி கடனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் பல வங்கிகள் 2021 நிதியாண்டில் கடனை ஒத்தி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications