இந்தியாவில் பெங்களூரு, சென்னை ,டெல்லி , மும்பை உள்ளிட்ட நகரங்கள் மெட்ரோ சிட்டிகளாக இருக்கின்றன. இந்த பெரிய நகரங்களில் வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான படையெடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த பெரிய நகரங்களில் எல்லாம் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளோ வாழ்க்கை தரமோ கிடையாது என்பது தான் உண்மை . போக்குவரத்து நெரிசல் , மழைக்காலங்களில் வெள்ளம் என பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது . அரசாங்கம் தற்போது இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது ஆனால் அந்த உள்கட்ட அமைப்பு வசதிகள் நடைமுறைக்கு வரும்போது அதைவிட பல மடங்கு அதிகமாக மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்து விடுகிறது.

இப்படி இந்திய பெருநகரங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்திருக்கும் நிலையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பெரு நகரங்கள் இந்தியாவிற்கு பெரிய பிரச்சனை எனக் கூறியிருக்கிறார். ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து இந்த கருத்தினை அவர் வெளியிட்டு இருக்கிறார். ஹைதராபாத்தில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கக்கூடிய காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.
நம்முடைய பெரு நகரங்கள் சரியாக இயங்க வேண்டும் என்றால் நாம் பொது போக்குவரத்தில் பெரிய அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ற வகையில் முதலீடு செய்து உள் கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே இது போன்ற ஒரு பெரிய நகரம் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய ஜிடிபி-யில் பெரும் பகுதியை நாம் உள்கட்டமைப்புக்காகவே செலவிட வேண்டி இருக்கிறது என கூறியுள்ளார்.
இதனால் நகரங்களில் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிக்கின்றன, இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 34 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஒரு நகரம். இந்த நகரத்தை மேம்படுத்த ஜப்பான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது , உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்தது ஆனால் இறுதியில் அந்த அரசு கடனில் தான் விழுந்தது என குறிப்பிட்டுள்ளார்.
நாம் நகரங்களின் அளவை சுருக்கி விட வேண்டும் என யோசனை தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நகரம் என்பது 1 லட்சத்திலிருந்து 2 .50 லட்சம் பேர் மட்டுமே கொண்டவையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உள்கட்டமைப்புக்காக பல மடங்கு செலவு செய்ய வேண்டியது இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார் . இப்பொழுது உங்களுக்கு தெரியும் நம்முடைய அலுவலகங்கள் எந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் அதற்கு என்ன காரணம் என்பது என தன்னுடைய பதிவினை முடித்திருக்கிறார்.
ஸ்ரீதர் வேம்பு நிறுவனங்கள் கிராமங்களை நோக்கி நகர வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். தென்காசியில் தன்னுடைய ஸோஹோ அலுவலகத்தை நிறுவி அதனை செய்தும் காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications