ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது ஐபிஓவைத் தொடங்க செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு செபியிடமிருந்து ஒப்புதலை பெற்றுள்ளது. நிறுவனம் விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா, அதன் ஐபிஓவை தொடங்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) ஒப்புதல் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிறுவனம் விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

தென் கொரியாவை தளமாகக் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்த ஐபிஓ மூலம் சுமார் 3 பில்லியன் டாலர் திரட்ட இலக்கு வைத்துள்ளது. ஐபிஓ அக்டோபரில் சந்தாவிற்கு திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2003 இல், மாருதி சுசுகியின் ஐபிஓ வெளிவந்தது. இப்போது இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா இந்தியாவில் ஐபிஓவை வெளியிடுகிறது. இதுகுறித்து ஹூண்டாய் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
ஹூண்டாய் இந்தியா தனது SUV வரிசையை விரிவுபடுத்துவதன் மூலம் டாடா மோட்டார்ஸ் போன்ற வலிமையான உள்நாட்டு போட்டியாளர்களிடமிருந்து சந்தைப் பங்கை மீட்டெடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் 2026 முதல் குறைந்தபட்சம் இரண்டு பெட்ரோலில் இயங்கும் மாடல்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் திட்டங்களை நன்கு அறிந்த ஆதாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.
இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் ஹூண்டாய்க்கு மூன்றாவது பெரிய வருவாய் ஈட்டும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஏற்கனவே 5 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. அடுத்த தசாப்தத்தில் மேலும் 4 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
அதேபோல், சாப்ட் பேங்க் ஆதரவு பெற்ற உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியின் ஐபிஓவுக்கும் செபி ஒப்புதல் அளித்துள்ளது. ஐபிஓ மூலம் சுமார் 1-1.2 பில்லியன் டாலர்களை திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று எகனாமிஸ்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கியின் 33% பங்குகளைக் மிகப்பெரிய முதலீட்டளர்களான Prosus போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் SoftBank தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்க வாய்ப்புள்ளது. அதேபோல், மற்ற முக்கிய முதலீட்டாளர்களில் அச்செல் (Accel), எலிவேஷன் கேபிட்டல் (Elevation Capital), மெயிடுவான் (Meituan), டென்செண்ட் (Tencent), நார்வெஸ்ட் வென்சர் பார்ட்னர் (Norwest Venture Partners), டிஎஸ்டி குளோபல் (DST Global), கோவட்யூ (Coatue), இன்வெஸ்கோ (Invesco) மற்றும் ஜிஐசி (GIC) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இதற்கிடையில், என்டிபிசி கிரீன் எனர்ஜி இந்தியாவின் அரசு நடத்தும் மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி நிறுவனம் IPO மூலம் 100 பில்லியன் ரூபாய் ($1.2 பில்லியன்) வரை திரட்ட திட்டமிட்டுள்ளது. இது இந்திய சந்தையில் அதிகரித்து வரும் ஒப்பந்தங்களின் அளவை எடுத்துக்காட்டுகிறது. புதன்கிழமை வெளியிடப்பட்ட வரைவு ப்ரோஸ்பெக்டஸ் படி, வருமானம் நிறுவனத்தின் துணை நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, இந்தியாவின் ஐபிஓ சந்தையானது சிறப்பான எழுச்சியைக் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 2024 இல் ஐபிஓ பட்டியலிடப்பட்ட வருமானம் இதுவரை 8.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான மொத்த தொகையை விட அதிகமாகும். நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், சீனா போன்ற பிற சந்தைகளில் உள்ள சவால்களுக்கு மத்தியில் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ முதலீடு ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications