‘Retail King of India’ முகேஷ் அம்பானி-யின் அடுத்த கனவு இதுதான்..!

இந்தியாவில் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மாபெரும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்-ஆக விளங்கி வருகிறது. ரிலையம்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகத்தில் இருந்து மாறுபட்டு டெலிகாம் துறையில் களமிறங்கிய நாள் முதல் இந்நிறுவனத்தின் வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மூலம் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈட்டி இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பாதை அமைத்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகப் பைபர் சேவையை மேம்படுத்த அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனத்துடன் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முதலீடு கிடைத்தால் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த 10 வருடத்திற்குச் செட்டில் ஆகிவிட்டது போலத் தான்.

இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது கவனத்தைத் தற்போது ரீடைல் வர்த்தகம் மீது திருப்பியுள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவில் Retail King அதாவது இந்தியாவில் மிகப்பெரிய ரீடைல் விற்பனையாளராக உயர வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளார்.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 20 மில்லியன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும், 160 மில்லியன் ஆடைகளையும், 2.6 பில்லியன் மளிகை பொருட்களையும் விற்பனை செய்து நாட்டின் முன்னணி ரீடைல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஆனால் 72.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய முகேஷ் அம்பானிக்கு இது போதாது, ரீடைல் துறையில் இருக்கும் அனைத்து வர்த்தக வாய்ப்புகளையும் முழுமையாக எட்டிப்பிடித்துவிட வேண்டும் எனத் திட்டம் தீட்டி ஆப்லைன் கடைகள் முதல் ஆன்லைன் வர்த்தகம் வரையில் அனைத்தையும் முயற்சி செய்து வருகிறார். குறிப்பாகச் சமீபத்தில் ரீலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை மேம்படுத்த ஈகாமர்ஸ் தளமான ஜியோமார்ட் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளார்.

 

ஐபிஓ

ஐபிஓ

ரிலையன்ஸ் ஜியோ-வை பன்னாட்டு முதலீட்டாளர்கள் முன்னிலையில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துவிட்ட நிலையில், தற்போது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தின் மூலம் அடுத்த பெரிய வர்த்தக விரிவாக்கத்தை ஏற்பாடு செய்து வருகிறார் முகேஷ் அம்பானி. ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு வருகிறது.

சரி ரிலையன்ஸ் ரீடைல் என்ன அவ்வளவு பெரிய நிறுவனமா..?

 

லாபம் மற்றும் வருவாய்

லாபம் மற்றும் வருவாய்

கடந்த 3 வருடத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் கிட்டதட்ட 2 மடங்கிற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆம் 2018ஆம் நிதியாண்டில் 70,000 கோடி ரூபாய் வருமானம் பெற்ற ரிலையன்ஸ் ரீடைல் 2020ஆம் நிதியாண்டில் 1,65,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

இதேபோல் லாப அளவீட்டில், 2018ஆம் நிதியாண்டில் கிட்டதட்ட 2000 கோடி ரூபாய் லாபம் அடைந்த ரிலையன்ஸ் ரீடைல், 2020ஆம் நிதியாண்டில் 9,500 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை மிகவும் சிறப்பாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

ரீடைல் சாம்ராஜ்ஜியம்

ரீடைல் சாம்ராஜ்ஜியம்

மொத்த ஊழியர்கள்: 1.4 லட்சம் பேர்

மொத்த கடைகள்: 11,800 கடைகள் இந்தியா முழுவதும்விற்பனை பிரிவுகள்: உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், பேஷன், லைப்ஸைட்ல், நகைகள்வாடிக்கையாளர் எண்ணிக்கை: 640 மில்லியன் வாடிக்கையாளர்கள் (2020 நிதியாண்டில்), 125 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள்

வளர்ச்சி: 40 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி

பியூச்சுர் குரூப்

பியூச்சுர் குரூப்

இந்தியாவில் மேலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரீடைல் வர்த்தகத்தில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பியூச்சுர் குரூப் வர்த்தகத்தைக் கைபற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் பியானியின் பியூச்சர் குரூப்-ன் பியூச்சர் ரீடைல், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ் மற்றும் பியூச்சர் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் ஆகிய 3 பெரிய நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், இணைத்த பின்பு இந்தக் கூட்டணி நிறுவனத்தை மொத்தமாக முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதாகத் தெரிகிறது.

 

1,500 கடைகள்

1,500 கடைகள்

இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்த டீல் வெற்றிபெற்றால் பியூச்சர் குரூப் நிறுவனத்தில் இருக்கும் 1,500 கடைகளும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் இணைந்துவிடும்.

முக்கிய வருவாய் தளம்

முக்கிய வருவாய் தளம்

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு 61 சதவீத வருமானம் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இருந்து வருகிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்டெல் முதலீட்டு வாயிலாக ஜியோ லேப்டாப் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தகவல் கிடைத்துள்ள நிலையில் இது சாத்தியமானால் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு இது ஜாக்பாட் தான்.

டிஜிட்டல் வர்த்தகம்

டிஜிட்டல் வர்த்தகம்

13,000 கடைகள் மூலம் ஆப்லைன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் ரீடைல், தற்போது பேஸ்புக் முதலீடு மூலம் வாட்ஸ்அப் இணைப்பு வாயிலாக இந்தியா முழுவதும் பெரும் நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரையில் தனது ஆன்லைன் ஈகாமர்ஸ் தளத்தையும் (Jiomart), மளிகை பொருட்கள் வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்ய முடியும்.

ரீடைல் கிங் ஆப் இந்தியா

ரீடைல் கிங் ஆப் இந்தியா

இப்படிப் படிப்படியாக இந்தியாவில் மொத்த ரீடைல் சாம்ராஜ்ஜியத்தையும் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆப்லைன் சந்தைக்கும் மட்டும் ஆன்லைன் சந்தையில் இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

முகேஷ் அம்பானி தனது கனவை நினைவாக்குவது சாத்தியமா..? உங்கள் பதிலை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+