ஒவ்வொரு சாதனை ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் அந்தப் பெண்களே சாதனையாளர்களாக இருந்தால் ஆச்சரியம்தானே! ஆம். இந்திய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, லட்சுமி மிட்டல், அதார் பூனவாலா, நிரஞ்சன் ஹிரானந்தனி ஆகியோரின் மனைவிகள் இப்படித்தான் சாதனைப் பெண்மணிகளாகத் திகழ்கின்றனர். அவர்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
நீதா அம்பானி: ரிலையன்ஸ் பவுண்டேஷனின் தலைவராக உள்ள நீதா அம்பானியின் அறக் கொடைகள் மிகவும் பிரபலமானவை. சத்தமில்லாமல் பல நல்ல காரியங்களை இந்த பவுண்டேஷன் மூலம் நீதா அம்பானி செய்து வருகிறார். இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியை மணந்து கொண்ட நீதா அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 3 பில்லியன் டாலர்களாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,08,77,11 லட்சம் கோடி ஆகும்.

சுதா மூர்த்தி: பிரபல எழுத்தாளர், அறக்கொடையாளர், கல்வியாளரான சுதா மூர்த்தி இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார். அவரது மனைவி என்பதையும் தாண்டி சுதா மூர்த்தியின் சாதனைகள் பல எல்லைகளைத் தாண்டியுள்ளார்.
சுதா மூர்த்தியின் நிகர சொத்து மதிப்பு ரூ.750 கோடி ஆகும். இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவராக இருந்த சுதா மூர்த்தி தனது சமூகப் பணியினால் இந்த சமூகத்தில் தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
யாஸ்மின் பிரேம்ஜி: விப்ரோ லிமிடெட்டின் தலைவர் அசிம் பிரேம்ஜியின் மனைவி யாஸ்மின் பிரேம்ஜி. பிரேம்ஜி பவுண்டேஷன் மூலம் யாஸ்மின் பல்வேறு குறிப்பிடத்தக்க அறச்செயல்களை செய்து வருகிறார். யாஸ்மினின் நிகர மதிப்பு ரூ.1,14,400 கோடியாகும். இன்சைடு அவுட்சைடு இதழின் முன்னாள் அசிஸ்டென்ட் எடிட்டர் அனுபவத்தை தனது அறச்செயல்களுக்காக சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார்.
உஷா மிட்டல்: ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் சிஇஓவான லட்சுமி நிவாஸ் மிட்டலின் மனைவி உஷா மிட்டல். இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் உஷா மிட்டல் வசித்து வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1,36,700 கோடி ஆகும். பல்வேறு அறச்செயல்களை முனை்ப்புடன் செய்து வருகிறார் உஷா மிட்டல்.
நடாஷா பூனவாலா: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சிஇஓவான அதார் பூனவாலாவின் மனைவி நடாஷா பூனவாலா. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் எக்ஸிகியூடிவ் டைரக்டராக நடாஷா பூனவாலா உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.660 கோடி ஆகும். நடாஷா பூனவாலா, வில்லு பூனவாலா சாரிடபிள் பவுண்டேஷனின் தலைவராகவும் உள்ளார்.
கமல் ஹிராநந்தனி: ஹிராநந்தனி குரூப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் ஹிராநந்தனியின் மனைவி கமல் ஹிராநந்தனி. தனது குடும்ப பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தில் மிகப் பெரிய பங்கை அளித்து வருகிறார். ஹிராநந்தனி குரூப் கம்பெனிகளின் டைரக்டராக கமல் ஹிராநந்தனி உள்ளார். பிரபல அமைப்புகளான வேர்ல்டு பிரசிடெண்ட்ஸ் ஆர்கனைசேஷன் மற்றும் இந்தியன் மெர்ச்சன்ட் சேம்பர்ஸிலும் அவர் தீவிர பங்காற்றி வருகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications