எப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்!

உலக அளவில் கொரோனா வர்த்தகம் மற்றும் வியாபாரங்கள் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இந்த கால கட்டத்தில் பலரும் பல விதமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

Recommended Video

பணக்காரர்களை கதற விடும் கொரோனா! டிமிக்கி கொடுத்த Amazon

சாதாரண மக்கள், கூலித் தொழிலாளர்கள் தங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சம்பளதாரர்கள், தங்கள் வேலையை காப்பாற்றிக் கொண்டு முழு சம்பளத்தைப் பெற போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

பில்லியனர்கள்

பில்லியனர்கள்

ஆனால் நம் பில்லியனர்களோ ஒரு சில பில்லியன் டாலரையே இழந்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..! அப்படி யார் எத்தனை பில்லியன் டாலரை இழந்து இருக்கிறார்கள், யாருக்காவது சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறதா? என்பதை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

1. முகேஷ் அம்பானி

1. முகேஷ் அம்பானி

இவரின் தந்தை திருபாய் அம்பனி, சாதாரண துணி வியாபாரியாக தன் வியாபாரி வாழ்க்கையைத் தொடங்கி, மெல்ல கச்சா எண்ணெய் வியாபாரத்தில் கால் வைத்து, இன்று மகன் முகேஷ் அம்பானி சில்லறை வணிகம், ஆன்லைன் இ காமர்ஸ் வியாபாரம், இண்டர்நெட், டெலிகாம் என இந்தியா முழுக்க வியாபித்து இருக்கிறார் நம் முகேஷ் அம்பானி.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

இவர் சொத்து மதிப்பு 11-04-2020 தேதி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கணக்குப் படி 44.5 பில்லியன் டாலராக சரிந்து இருக்கிறது. கடந்த டிசம்பர் 2019 கால கட்டத்தில் எல்லாம் சுமாராக 60 பில்லியன் டாலரைத் தொட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மனிதரின் சொத்து மதிப்பு சுமாராக 15.5 பில்லியன் டாலர் காற்றோடு கரைந்துவிட்டது.

Radhakishan Damani

Radhakishan Damani

இந்த கொரோனா வைரஸ் மத்தியில் ஒரு பணக்காரர் நிம்மதியாக வாழ்கிறார் என்றால் அவர் ராதாகிஷன் தமானியாகத் தான் இருப்பார். டி மார்ட் என்கிற சூப்பர் மார்க்கெட் கடையை இவர் தான் நடத்திக் கொண்டு இருக்கிறார். இவர் கடை தமிழகத்தில் அத்தனை பிரபலம் இல்லை என்றாலும், இவர் கம்பெனி சிறப்பாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது.

சொத்து பத்துக்கள்

சொத்து பத்துக்கள்

இவரின் சொத்து மதிப்பு மட்டும் தான் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து இருக்கிறது. கடந்த மார்ச் 2019-ல் 11.1 பில்லியன் டாலராக இருந்த இவரின் சொத்து மதிப்பு தற்போது 16.4 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம். ஆக இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் மனிதரின் சொத்து பத்துக்கள் சுமார் 5.3 பில்லியன் டாலர் அதிகரித்து இருக்கிறது.

Hinduja brothers

Hinduja brothers

அசோக் லேலண்ட், ஹிந்துஜா ஹெல்த் கேர், ஹிந்துஜா ஃபவுண்ட்ரீஸ், இண்டஸ் இண்ட் பேங்க், கல்ஃப் ஆயில்... என பல கம்பெனிகளை இவர்கள் குடும்பம் தான் நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த குடும்பத்துக்கு இந்தியா மட்டும் இன்றி உலகின் பல நாடுகளின் வியாபாரம் இருக்கின்றன. S. P. Hinduja, Gopichand Hinduja, Prakash Hinduja, Ashok Hinduja என்கிற நான்கு பேர் தான் இந்த குடும்பத்தின் அச்சாணி.

சொத்துக் கணக்குகள்

சொத்துக் கணக்குகள்

இவர்களின் சொத்து மதிப்பு கடந்த மார்ச் 2018-ல் சுமார் 19.5 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போது இந்த கொரோனா அடித்த அடியால் சுமார் 12.3 பில்லியன் டாலராக சரிந்துவிட்டது என ஃபோர்ப்ஸ் நிறுவனம் கணக்கு சொல்கிறது. ஆக சுமார் 7.2 பில்லியன் டாலர் காலி.

Shiv Nadar

Shiv Nadar

இவரும் இந்தியா அறிந்த முகம் தான். ஹெச் சி எல் இன்ஃபோசிஸ்டம் நிறுவனத்தின் தலைவர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் சொத்து மதிப்பு கடந்த மார்ச் 2019-ல் 14.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்த கொரோனாவால் சுமார் 12.3 டாலராக குறைந்துவிட்டது. 2.3 பில்லியன் டாலர் காலி.

Pallonji mistry

Pallonji mistry

ஜம்மு உதம்பூர் ஹைவேயை கட்டியவர்கள், கொச்சியில் இருக்கும் எல் என் ஜி டேங்குகள், எல் என் ஜி ஜெட்டிக்கள், போலா கம்பைண்ட் சைக்கில் மின் நிலையம், Acropolis, Patropolis, Helipolis போன்ற மும்பையின் முக்கிய கட்டடங்களை கட்டியவர்கள் எல்லாம் இவரின் ஷபூர்ஜி பலோன்ஜி (Shapoorji Pallonji Group) நிறுவனம் தான். இது சுமார் 150 ஆண்டு கால பழைய கம்பெனி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காசு பணம்

காசு பணம்

இந்த Pallonji Mistry-ன் இளைய மகன் தான் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி. மிஸ்த்ரி குடும்பத்துக்கும் டாடா குழுமத்துக்கும் ஒரு நீண்ட கால நட்பு உண்டு. இந்த Pallonji Mistry-யின் சொத்து மதிப்பு கடந்த மார்ச் 2018-ல் 17.8 பில்லியன் டாலராக இருந்தது. இப்போது 11.4 பில்லியன் டாலராக சரிந்து இருக்கிறது.

Uday Kotak

Uday Kotak

தெரிந்த பெயர் தானே, கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைவர். இப்போது கோட்டக் மஹிந்திரா இந்தியாவின் டாப் தனியார் வங்கிகளில் ஒன்று. இவரின் கோட்டக் 811 செயலி (டீமானிட்டைசேஷனால் 8-11-2016 என்பதை சுருக்கி 811 என்று வைத்தார்) ரொம்ப பிரபலம். கடந்த அக்டோபர் 2019-ல் இவரின் சொத்து 14.8 பில்லியன் டாலராக அதிகரித்தது. 11-4-2020-ல் இவர் சொத்து அம்திப்பு 10.9 பில்லியன் டாலருக்கு சுருங்கிவிட்டதாக கணக்கு சொல்கிறது ஃபோர்ப்ஸ்.

விவரம் கிடைக்கவில்லை

விவரம் கிடைக்கவில்லை

கெளதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த அக்டோபர் 2019 காலகட்டத்தில் 15.7 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இப்போதைய கணக்கை ஃபோர்ப்ஸ் வெளியிடவில்லை.
அதே போல கோத்ரேஜ் குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த அக்டோபர் 2018-ல் 14 பில்லியன் டாலராக இருந்தது. 2020-ம் ஆண்டு கணக்கை ஃபோர்ப்ஸ் வெளியிடவில்லை. ஆனால் இவர்களுக்கும் கணிசமாக சொத்துக்கள் குறைந்து இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா

கொரோனா

இப்படி கொரோன வைரஸால் மிகப் பெரிய பணக்காரர்களே, தங்களின் சொத்து பத்துக்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், நம்மைப் போன்ற மாத சம்பளதாரர்களின் நிலை? அன்றாடம் வேலை பார்த்து சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்களின் நிலை? நினைக்கவே பயமாக இருக்கிறது. விரைவில் கொரோனா ஒழியட்டும், வர்த்தகம் வளரட்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+