இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளால் நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெக் ஸ்டார்ட்அப்கள் அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்களை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் பிரபல போர்ப்ஸ் பத்திரிகையின் 2024 ஆம் ஆண்டின் பில்லியனர்கள் பட்டியலில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் வழக்கம் போல் எல்லோருக்கும் தெரிந்தது போலவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஆசியாவிலும் இந்தியாவிலும் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தைப் பெற்று இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் $83 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது $116 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், மதிப்புமிக்க $100 பில்லியன் டாலர் கிளப்பில் இடம்பெறும் ஒரே ஆசிய நபராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து 2வது இடத்தில் யார்..? நீங்க நினைத்தது சரி தான்.
கௌதம் அதானி $84 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் இரண்டாவது செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு $36.8 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் அவர் 17வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சரி வாங்க முக்கியமான விஷயத்துக்குப் போவோம், இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியப் பணக்காரர்களின் எண்ணிக்கை வியப்பளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 169 இந்திய பில்லியனர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ஓரே வருடத்தில் 1 பில்லியன் டாலர் அதாவது 8300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 31 பேர் உருவாகியுள்ளனர்.
2024 பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 200 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டின் 675 பில்லியன் டாலரில் இருந்து 41% அதிகரித்து தற்போது 954 பில்லியன் டாலராக உள்ளது. இந்த 2 விஷயம் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் 200 பில்லியனர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 279 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 23,28,255 கோடி ரூபாய்.
இந்தியாவின் பணக்காரர் பெண்மணி என்ற பெருமையைச் சமீபத்தில் காங்கிரஸ்-ல் இருந்து பிஜேபி கட்சிக்கு மாறிய சாவித்திரி ஜிண்டால் பெற்றுள்ளார். சுமார் 33.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் நான்காவது செல்வந்தராக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு புதியதாக அதாவது முதல் முறையாக 25 இந்திய பில்லியனர்கள் இந்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் நரேஷ் திரிஹன், ரமேஷ் கன்ஹிகனன் மற்றும் ரேணுக ஜக்தியானி ஆகியோர் ஆவர்.
இந்த ஆண்டு பட்டியலில், கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த பிஜு ரவிந்த்ரன் மற்றும் ரோஹிகா மிஸ்திரி ஆகியோர் இந்த ஆண்டு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டாப் 10 பில்லியனர்கள்:
முகேஷ் அம்பானி - $116 பில்லியன்
கௌதம் அதானி - $84 பில்லியன்
சிவ நாடார் - $36.9 பில்லியன்
சாவித்ரி ஜிண்டால் - $33.5 பில்லியன்
திலீப் ஷங்வி - $26.7 பில்லியன்
சைரஸ் பூனவல்லா - $21.3 பில்லியன்
குஷால் பால் சிங் - $20.9 பில்லியன்
குமார் பிர்லா - $19.7 பில்லியன்
ராதாகிஷன் தமானி - $17.6 பில்லியன்
லட்சுமி மிட்டல் - $16.4 பில்லியன்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications