பிறந்தநாள் என்றாலே நம் அனைவருக்கும் ஸ்பெஷலானவை தான். குறிப்பாக மைல்ஸ்டோன் பிறந்தநாள்கள் நமது மனதுக்கு மிக நெருக்கமானவையாக இருக்கும். இப்படிப்பட்ட நாட்களில் நமக்கு மிகவும் பிடித்தவர்கள் ஏதேனும் பரிசு பொருட்கள் அளித்தால் அதை நாம் வாழ்நாளில் மறக்க மாட்டோம். அப்படிப்பட்ட ஒரு பரிசு தான் இந்த இளைஞருக்கு கிடைத்திருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் விவேக் குமார் ரங்தா தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விகேஆர் குழுமத்தின் தலைவர் விவேக் குமார் ரங்தா. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், பட தயாரிப்பு என பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த குழுமம். இதன் தலைவரான விவேக் குமார் ரங்தா தன்னுடைய மகனுக்கு 18ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். மகன் தருஷ்க்கு இவர் லம்போர்கினி ஹராகேன் எஸ்டிஓ வகை காரினை பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த காரின் மதிப்பு 5 கோடி ரூபாயாகும்.
தந்தையின் விலை உயர்ந்த பரிசு குறித்து தருஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தன்னுடைய கனவு கார் கிடைத்துவிட்டதாகவும், இந்த தருணம் உணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இவரது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில நிமிடங்களில் 11 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இதனை லைக் செய்துள்ளனர். பொதுவாகவே லம்போர்கினி வகை கார்களை வைத்திருப்பதே ஒரு ஸ்டேட்டஸாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெரும் பணக்காரர்கள், இது போன்ற சொகுசு கார்களை வாங்கி தங்களின் செல்வ வளத்தை காட்டுகின்றனர்.
லம்போர்கினி ஹூராகன் எஸ்டிஓ கார் மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. சாலையில் ஓட்டுவதற்கான அங்கீகாரம் பெற்ற ரேஸ் காராக இது இருக்கிறது. இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் இந்த காரை வாங்கியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications