இந்தியாவின் கலாச்சாரத்திற்கு மிகவும் பெயர் போன நாடாகும். இதனாலேயே இந்திய பணக்காரர்கள், பெரும் தொழிலதிபர்கள் தொடர்ந்து கூட்டு குடும்பமாகவே உள்ளனர்
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களின் மகன் / மகள் மீடியா வெளிச்சத்தை விட்டு விலகி இருக்கவே விரும்புவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் காட்ட அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் அவர்களின் மருமகள்கள் மீடியாக்களின் வெளிச்சம் அவர்களின் மீது இருப்பதையே விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக சில தொழிலதிபர்களின் மருமகள்கள் ட்ரெண்ட் செட்டர்களாகவும், சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கென தனியான ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளனர். அவர்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஸ்லோகா மேத்தா அம்பானி!
இந்திய பிரபல தொழிலதிபர்களின் பிரபலமான மருமகள்கள் பட்டியலில் முதல் இடம் பிடிப்பவர் முகேஷ் அம்பானியின் மருமகளான ஸ்லோகா மேத்தா (Shloka Mehta) அம்பானி. முகேஷ் அம்பானியின் இரட்டை குழந்தைகளில் ஒருவரான ஆகாஷ் அம்பானியின் காதல் மனைவிதான் ஸ்லோகா மேத்தா அம்பானி.
ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தா இருவரும் மார்ச் 9 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ப்ரித்வி ஆகாஷ் அம்பானி என்ற ஆண் குழந்தையும் உண்டு.
பரிதி ஷெராஃப் அதானி!
பரிதி ஷெராஃப் அதானி, கோடீஸ்வர தொழிலதிபரான கௌதம் அதானியின் மூத்த மருமகள் ஆவார். இவர் கௌதம் அதானியின் மூத்த மகனான கரண் அதானியின் மனைவி, இவருக்கு அழுகு மட்டுமின்றி நல்ல தொழில்திறமையும், மூளையும் உண்டு, ஏனெனில் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
மும்பையில் இயங்கி வரும் சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் சிரில் ஷ்ராஃப்-ன் மகள் தான்
பரிதி (Paridhi). இந்தியாவிலேயே மிகப்பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்று சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ்.
திவா ஜெய்மின் ஷா
கௌதம் அதானி-யின் இளைய மகன் ஜீத் அதானி-க்கும் வைர வியாபாரியின் மகளான திவா ஜெய்மின் ஷா-வுக்கும் மார்ச் 12 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.
சி.தினேஷ் & கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல வைர வியாபாரியுமான ஜெய்மின் ஷாவின் மகள் தான் திவா ஜெய்மின் ஷா.
ராதிகா மெர்சண்ட்
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்சண்ட் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் வாரிய இயக்குநராக உள்ளார்.
கிரிஷா ஷா!
முகேஷ் அம்பானியின் இளைய சகோதரரான அனில் அம்பானியின் மருமகள் தான் கிரிஷா ஷா. இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் Social Policy and Development பட்டம் பெற்றவராவார். அனில் அம்பானியின் மூத்த மகனான ஜெய் அன்மோல் அம்பானி-யின் மனைவிதான் கிரிஷா ஷா.
நடாஷா பூனவல்லா!
சைரஸ் போனவல்லா குழுமத்தின் தலைவர் மற்றும் கோடீஸ்வரரான சைரஸ் எஸ் பூனவல்லாவின் மருமகள்தான் நடாஷா பூனவல்லா. நடாஷா பூனவல்லா சைரஸ் பூனவல்லாவின் மகன் ஆதார் பூனவல்லாவை மணந்தார். அவர் ஒரு பிரபலமான சமூகவாதி மற்றும் பேஷன் சென்ஸுக்கு பெயர் பெற்றவர். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான Serum Institute of India சைரஸ் பூனவல்லாவிற்கு சொந்தமான நிறுவனமாகும்.
சாக்ஷி சப்ரா மிட்டல்!
பார்தி எண்டர்பிரைசஸ் தலைவரும் நிறுவனருமான சுனில் பார்தி மிட்டலின் மருமகளும் FOODHAK எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆகவும் இருப்பவர்தான் சாக்ஷி சப்ரா மிட்டல். இவர் சுனில் பார்தி மிட்டலின் மகன் ஷர்வின் மிட்டல் சாவி சப்ரா மிட்டலை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications