கம்பெனி சீனாவோடது தான்! ஆனா கம்பெனியோட பெருந்தலைகள் இந்தியர்கள்! ட்விட்டரில் களேபரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று கொரோனாவினை விட மிக அதிகமாக இந்தியா முழுவதும் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் தான் சீனா இந்தியா எல்லை பிரச்சனை.

அதனை விட இன்னும் வேகமாய் பரவி வருவது சீன பொருட்கள் வேண்டாம். அதிலும் சமூக வலைதளங்களில் இன்று டிரெண்டிங் ஆக இருப்பது #BoycottcChineseProducts, boycottcChinesegoods, இந்த மாதிரியான ஹேஷ்டேக்குகள் தான்.

ஆனால் இதற்கு மத்தியில் சீன நிறுவனங்களின் நிர்வாகிகள் இது தங்களது வர்த்தகத்தில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்றேல்லாம் கூறி வருகின்றனர்.

சீன நிறுவனங்கள் எச்சரிக்கை
 

சீன நிறுவனங்கள் எச்சரிக்கை

ஆனால் இது குறித்து லைவ் மிண்ட் செய்தியொன்றில், சீனாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், சீனப் பொருட்களை புறக்கணிப்பதற்கான வளர்ந்து வரும் கோரஸ் வளர்ந்து வருகிறது. இதற்கு மத்தியில் ஜியோமி மற்றும் ரியல்மி போன்ற மிகவும் பிரபலமான பிராண்டுகளின் சில நிர்வாகிகள் எப்போதும், புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தும் போது, அதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் சேர் செய்வர்.

விற்பனை தேதி டிரோல்

விற்பனை தேதி டிரோல்

ஆனால் இந்த முறை சீனா இந்திய பதற்றங்களுக்கு மத்தியில், அதில் மிக எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்துள்ளதாக இதனையறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கிடையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோமின் Mi Notebooksக்களுக்கான அடுத்த விற்பனை தேதியை அறிவித்த ஜியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயினின் ட்வீட் ட்விட்டரில் டிரோல் செய்யப்பட்டது.

ட்விட்டரில் பதிலடி

ட்விட்டரில் பதிலடி

இதற்கு பல ட்விட்டர் பயனர்கள் சீன பொருட்களை புறக்கணிக்கவும் என்று எழுதியுள்ளனர். ஆனால் ஒரு பயனர் மட்டும், மனு குமாரினை தேவையற்ற கவனத்தினை ஈர்பதை தவிர்த்து அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் அந்த டிவீட்டின் இரண்டு மணி நேரத்திற்குள் கிட்டதட்ட 625 லைக்குகளையும், 77 ரீட்வீட்டுகளையும் பெற்றது.

பல லைக்ஸ்
 

பல லைக்ஸ்

மனு குமார் ஜெயினை ட்விட்டாரில் 3,74,000க்கும் அதிகமானோர் பின் தொடர்பவர்கள் உள்ளனர். மி நோட்புக்குகளின் விற்பனை தொடர்பான ஜீன் 17 அன்று அவர் செய்த ட்வீட் கிட்டதட்ட 2,000 லைக்குகளையும், 470 டீடிவீட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரியல்மியும் அப்படித்தான்

ரியல்மியும் அப்படித்தான்

இதே ரியல்மி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் ஷெத் இதே போன்ற பதிலை கடந்த வியாழக்கிழமையன்று சமாளிக்க வேண்டியிருந்தது. இவர் ரியல்மி X3 மற்றும் ரியல்மி X3 சூப்பர்ஜூம் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ட்வீட் செய்தபோது இத்தகைய பதில்கள் வந்தது.

ட்விட்டரில் தொடரும் BoycottcChineseProducts

ட்விட்டரில் தொடரும் BoycottcChineseProducts

இன்னும் சில பயனர்கள் சீன நிறுவனங்களை விட்டு வெளியே வாருங்கள். இந்தியா நிறுவனங்கள் மூலம் இதுபோன்ற மொபைல்களை உருவாக்குங்கள் என தங்களது கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். மேலும் சிலர் தொடர்ந்து #BoycottcChineseProducts, #boycott china என தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian CEO’s of Chinese brands get trolled on twitter

Amid china india border tension and a growing chorus for boycotting Chinese goods.
Story first published: Friday, June 19, 2020, 18:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X