இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO இவர் தான்.. யாரு சாமி நீ..?

இந்தியாவில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரிகளின் எண்ணிக்கை 179 ஆக இருந்தது, 2024 ஆம் நிதி ஆண்டில் 19 சதவீதம் அதிகரித்து 213 என மாறியுள்ளது.

ஒரு மில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8.6 கோடி ரூபாய் ஆகும். கடந்த மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவில் தலைமை செயல் அதிகாரிகள் பெற்ற ஊதியத்தின் மொத்த தொகை 5144 கோடி ஆகும்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO இவர் தான்.. யாரு சாமி நீ..?

இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% அதிகம். எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் மற்றும் EMA Partners India ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள 200 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியத்தை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஊதியம் மட்டுமில்லாமல் நிறுவனத்தின் பங்கும் கணிசமாக வழங்கப்படும். எனவே நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர உயர இவர்களின் சம்பளமும் ஏறிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டில் அதிகபட்ச ஊதியம் பெற்ற இந்திய தலைமை செயல் அதிகாரி என்ற பெருமை பூனவல்லா ஃபின்கார்ப் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அபய் புத்தாடாவையே சேரும். இவர் 2024 ஆம் ஆண்டில் 241 கோடியை வருமானமாக ஈட்டியிருக்கிறார். இதில் 236 கோடி ரூபாய் பங்குகள் மூலம் மட்டும் கிடைத்திருக்கும்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயலதிகாரியான தியரி டெலப்போர்டே. இவர் 167.6 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் மஞ்சல் 109 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது டெக் மகேந்திரா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சிபி குருநானி. இவர் 91.8 கோடி ரூபாயை ஈட்டி இருக்கிறார். அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் பிரகாஷ் 89 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டி இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார்.

இந்தியா 10 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எதிர்வரும் காலத்திலும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியம் தொடர்ந்து உயரும் என இந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் திறமையான நபர்களுக்கு இங்கே தேவையும் அதிகமாக இருக்கிறது. எனவேதான் சிஇஓ பதவிக்கான தேவையும் இந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கான சம்பளமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

ஒரு மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய 213 தலைமை செயல் அதிகாரிகளில் 9 பேர் மட்டுமே பெண்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்கள் யாரும் முதல் 20 இடங்களை கூட பிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+