சொந்த வீடு என்பது பல இந்திய குடும்பங்களின் கனவாக இருக்கிறது. இதற்காக பலரும் வங்கிகளில் கடன் வாங்கி சொந்தமாக வீடு வாங்குகின்றனர். ஆனால் இந்திய குடும்பங்கள் தற்போது வீடு வாங்கும் போக்கினையே மாற்றியுள்ளன.
சொந்த வீடு: தங்களுக்கு என சொந்தமாக ஒரு வீடு என்ற மனநிலையிலிருந்து மாறி அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர குடியிருப்புகளை நோக்கி மக்கள் நகர்ந்து வருகின்றனர் என்பது அண்மையில் வெளியான தரவுகளின் மூலம் தெரிய வருகிறது. இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில் வீடுகளின் விற்பனை விகிதம் 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

வீடு விற்பனை மதிப்பு உயர்வு: கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவில் 3.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன அதுவே இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவின் முதல் நிலை நகரங்களில் 3.6 லட்சம் கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது. ஆனால் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை என பார்க்கும்போது 4 சதவீதம் குறைந்திருக்கிறது .
வீடு விற்பனை எண்ணிக்கை குறைந்தது: கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் ஆறு மாத காலத்தில் 2,70,000 வீடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் அது 2,54,000 என குறைந்திருக்கிறது. அதே வேளையில் வீடுகளின் சராசரி விலை என்பது 14 சதவீதம் உயர்ந்து 1.42 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் தற்போது பிரீமியம் குடியிருப்புகளுக்கான தேவையும் விற்பனையும் உயர்ந்து வருவது இந்த தரவுகளின் மூலம் தெரிகிறது.

டெல்லி நிலவரம்: டெல்லியை பொறுத்தவரை வீடுகளின் விற்பனை மதிப்பு அங்கே 26 சதவீதம் உயர்ந்திருக்கிறது .டெல்லியில் விற்பனை செய்யப்பட்ட 25 ஆயிரம் வீடுகளில் 73 சதவீத வீடுகள் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்டவையாக இருக்கின்றன. மும்பையில் வீடுகளின் விற்பனை மதிப்பு 23 சதவீதம் உயர்ந்திருக்கிறது . இங்கே வீடுகளின் விலை 16 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது . 3.5 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்ட அல்ட்ரா பிரீமியம் வீடுகளின் விற்பனை இங்கே 29 சதவீதத்திலிருந்து 34 சதவீதம் என அதிகரித்து இருக்கிறது.
சென்னையில் வீடு விலை: சென்னையிலும் வீடுகளின் விற்பனை மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 23 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே வேளையில் வீடுகளின் விலை 12% அதிகரித்து இருக்கிறது. பெங்களூருவில் வீடு விற்பனை மதிப்பு 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது , இங்கே 30,000 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன வீடுகளின் விலை என பார்க்கும்போது 17 சதவீதம் விலை உயர்வு கண்டிருக்கிறது.
ஆடம்பர வீடுகளை நோக்கி நகரும் மக்கள்: இந்தியாவில் இந்த ஆறு மாத காலத்தில் வீடுகளின் விற்பனை தரவுகளின் மூலம் மற்றொரு புதிய விஷயம் வெளிவந்திருக்கிறது. மக்கள் 70 லட்சம் ரூபாயில் இருந்து 1.5 கோடி வரையிலான மதிப்புள்ள வீடுகளை வாங்கும் போக்கு குறைந்திருக்கிறது . பெரும்பாலான மக்கள் தற்போது ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்: முதல் நிலை நகரங்களில் கடந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 98, 000 வீடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் இந்த ஆண்டு அது 82,000 வீடுகளாக குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சந்தை நிலவரத்தையும், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் பார்வையிட்டு அதன் அடிப்படையில் தான் புதிய வீடு கட்டும் திட்டங்களை அறிவிக்கிறார்கள் .
ஆடம்பர வீடுகள் விற்பனை உயர்வு : இந்தியாவில் வீடுகளின் விற்பனை குறைந்து இருந்தாலும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் ஜிசிசி மையங்களின் வருகையால் அதிகரிக்கும் சம்பளம் மற்றும் சௌகரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் என பல விஷயங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications