இந்தியாவில் தனியார் முதலீடுகள் மிகவும் மந்தமாக இருப்பதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் வேளையில், மத்திய அரசு இப்பிரிவு முதலீட்டை அதிகரிக்க பல கவர்ச்சிகரமான திட்டத்தை வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்திய நிறுவனங்கள் தனது வர்த்ககத்திற்காக அதிகப்படியான முதலீடுகளை செய்து வருகிறது.
கனடாவின் முக்கிய வர்த்தக நகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்ட CII அறிக்கையின் படி, இந்திய நிறுவனங்கள் கனடா நாட்டில் சுமார் 6.6 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்து, அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கனடா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது 'இந்தியாவில் இருந்து கனடா வரை: பொருளாதார தாக்கம் மற்றும் ஈடுபாடு' என்ற தலைப்பில் CII அமைப்பு உருவாக்கிய அறிக்கையை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்திய நிறுவனங்கள் கனடா நாட்டின் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் மேம்படுத்தியுள்ளது என்பதை விளங்கியுள்ளது.
இந்திய நிறுவனங்கள் அன்னிய முதலீடுகள் வாயிலாகாவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட வர்த்தகம் மூலம் அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கியும், R&D-க்கு அதிகப்படியான நிதியுதவி செய்தும், corporate social responsibility மூலம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்தது மூலம் கனடா நாட்டு பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது.

இந்த அறிக்கையின் படி கனடா நாட்டில் 30 இந்திய நிறுவனங்கள் மொத்தம் 6.6 பில்லியன் டாலர் முதலீடு செய்து, சுமார் 8 மாகாணங்களில் 17000த்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த 30 நிறுவனங்களும் அடுத்த 5 வருடத்தில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்யவும், 96 சதவீத நிறுவனங்கள் கூடுதலான ஊழியர்களை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டு உள்ளது என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications