இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருந்தன. அவை தற்போதும் செயல்படுகிறதா என்பதை விரிவாக பார்க்கலாம்..
அகமதாபாத் முனிசிபல் போக்குவரத்து கழகம்: அகமதாபாத் நகரில் பொதுமக்களுக்கு பேருந்து சேவையை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம் தான் இது. 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனால் இது நிறுவப்பட்டது. அப்போது பேருந்து கட்டணமாக ஒரு அனா முதல் மூன்று அனா வரை வசூலிக்கப்பட்டதாம்.

அகமதாபாத் போக்குவரத்து சேவை நிறுவனம் புதிதாக பேருந்துகளை வாங்கவில்லை அதற்கு மாறாக குஜராத் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பேருந்துகளை ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற அளவில் வாடகைக்கு எடுத்து இயக்கியது. பேருந்து சேவைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்ததை அடுத்து சொந்தமாக பேருந்துகளை வாங்கி இயக்கத் தொடங்கியது. தற்போதும் கூட அகமதாபாத் முனிசிபல் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மக்களுக்கான சேவையை ஆற்றி வருகிறது.
அம்பிகா ஏர்லைன்ஸ்: 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது தான் அம்பிகா ஏர்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் .அம்பிகா ஷிப் நேவிகேஷன் என்ற கப்பல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் அம்பிகா ஏர்லைன்ஸ் .அந்த காலகட்டத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மும்பை வதோதரா அகமதாபாத் இடையே சேவை வழங்கியது. 1949 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டது. இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் சிறந்த விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனமாக அம்பிகா ஏர்லைன் செயல்பட்டது.
அதுல்: 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத்தை தலைமை இடமாக கொண்டு தொடங்கியது தான் அதுல் நிறுவனம். இது ஒரு ரசாயன நிறுவனம் ஆகும். பல்வேறு நாடுகளுக்கும் இந்த நிறுவனம் பல்வேறு வகையான ரசாயனங்களையும் ரசாயனம் சார்ந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனமானது தற்போது தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் 4358 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
பரணி பிக்சர்ஸ்: சென்னையை தலைமை இடமாக கொண்டு பிஎஸ் ராமகிருஷ்ண ராவ் மற்றும் பானுமதி ராமகிருஷ்ணா ஆகியோரால் தொடங்கப்பட்டது தான் பரணி பிக்சர்ஸ் நிறுவனம். பின்னர் 1950 ஆம் ஆண்டில் இது பரணி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பரணி பிக்சர்ஸ் 1948 ஆம் ஆண்டு 1987 வரை செயல்பட்டு வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படங்களை தயாரித்து வெளியிட்டது. தமிழில் லைலா மஜ்னு, கானல் நீர் போன்ற படங்களை தயாரித்தது.
பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரி லிமிடெட்: 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆலைகளை அமைத்து இந்த நிறுவனம் இயங்கி வந்தது . பாராசூட் மற்றும் சப்போலா என பல்வேறு புகழ்பெற்ற பிராண்டுகள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது தான்.
டெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்: டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு 1947 ஜூன் 25 அன்று தொடங்கப்பட்டதுடெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். 2017 ஆம் ஆண்டு இது வர்த்தக தொழிலில் இருந்து வெளியேறியது. இந்தியாவை சேர்ந்த முதன்மையான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்களில் இதுவும் ஒன்று. சுமார் 3,000 நிறுவனங்கள் இதில் பட்டியலிடப்பட்டிருந்தன.
எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்: பேட்டரி நிறுவனமான எக்சைட் இண்டஸ்ட்ரி 1947 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படும் பேட்டரி நிறுவனமாக இது இருக்கிறது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் மட்டும் 16,000 கோடி ரூபாய் ஆகும். தற்போது இந்த நிறுவனம் இந்தியா மட்டும் இன்றி இலங்கை, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் துணை நிறுவனங்களை அமைத்து கிட்டத்தட்ட 60 நாடுகளுக்கு பேட்டரி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது.
ஹட்டி கோல்டு மைன்ஸ்: கர்நாடகாவை தலைமை இடமாகக் கொண்ட இந்த நிறுவனம் தங்க சுரங்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதன்முறையாக இது ஹைதராபாத் கோல்ட் மைன்ஸ் என்ற பெயரில் 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்றளவும் இந்தியாவில் தங்க சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் ஹட்டி கோல்ட் மைன்ஸ் நிறுவனமும் ஒன்று. தற்போது இது கர்நாடக அரசின் கட்டுக்குள் இருக்கிறது.
பிடிஐ செய்தி நிறுவனம்: இந்தியாவின் முன்னணி செய்தி முகமையான பிடிஐ எனப்படும் பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா 1947 ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு சென்னையில் பிடிஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாக தொடங்கப்பட்டது தி இந்து குழுமத்தின் கஸ்தூரி சீனிவாசன் தான் இதன் நிறுவனத் தலைவராக இருந்தார். தற்போதும் இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு வெற்றிகரமான செய்தி நிறுவனம் இது.
உத்தரப்பிரதேச சாலை போக்குவரத்து கழகம்: 1947 மே 15ஆம் தேதி முதன்முறையாக உத்தர பிரதேசத்தில் மக்களுக்காக பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. லக்னோ மற்றும் பாரபங்கி இடையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக இந்த பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக செயல்படும் பேருந்து நிறுவனமாக இது இருக்கிறது.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications