சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனாவுக்கு மத்தியில் சர்வதேச பொருளாதாரம், மேற்கொண்டு பாதிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் இந்தியாவில் ஹைபிரிட் மாடல் பணியினை நிறுவனங்கள் தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட், மாரிக்கோ, டாடா ஸ்டீல், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, போஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றம் ஈட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் 2023ம் ஆண்டில் ஹைபிரிட் மாடல் பணியினை திட்டமிடுபவர்களில் சிலராகும். இது ஊழியர்களுக்கு சிறந்த வாய்ப்பினை பராமரிக்க காரணமாக அமையும் எனலாம்.
ஹைபிரிட் மாடல் பணி
இந்த ஹைபிரிட் மாடல் பணியானது நிறுவனம் மற்றும் ஊழியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஒரு தேர்வாக இருந்து வருகின்றது. இதன் மூலம் ஊழியர்கள் அலுவலகம் வந்தும் பணியாற்ற முடியும். வீட்டில் இருந்தும் பணியாற்ற முடியும். இதன் மூலம் ஊழியர்களை சந்திக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி திறனையும் அதிகரிக்க முடியும் என நிறுவனங்கள் நம்புகின்றன.
ஊழியர்களுக்கு நெகிழ்வு
நிறுவனங்களின் இந்த முடிவு ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வை அளிக்கும். இது ஊழியர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் குடும்பம் என இரண்டையும் சமமாக பார்க்க பயனுள்ளதாக இருக்கும். சமீபத்திய ஆய்வொன்றில் பெரும்பாலான ஊழியர்கள் தாங்கள் தங்களின் வீடுகளில் இருந்து பணியாற்றுவதையே விருப்பமான ஒன்றாகவும் பார்ப்பது தெரிய வந்தது. ஹைபிரிட் மாடல் பணியில் இது அவர்களுக்கு அந்த நெகிழ்வையும் கொடுக்கும் எனலாம்.
பிளிப்கார்டின் திட்டம்
பிளிப்கார்டின் தலைமை மக்கள் அதிகாரி, நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே ஹைபிரிட் மாடலினை செயல்படுத்தி வருகின்றது. மிண்டும் ஹைபிரிட் மாடல் பணியினையே வழங்கவுள்ளதாகவும், இது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும். எனினும் நாங்கள் ஊழியர்களுக்கு தேவையான ஆப்சனை வழங்குவோம். இது ஊழியர்களுக்கு நெகிழ்வை அளிக்கும் என கூறியுள்ளார்.
ஒயிட் காலர் பணி
இதே உற்பத்தி துறையினை பொறுத்தவரையில் பலரும் தங்கள் அலுவலகத்திற்கு திரும்பியுள்ளனர். எனினும் கொரோனா காலத்தில் பலருக்கும் ஹைபிரிட் மாடல் பணியானது ஒயிட் காலர் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இன்று வரையிலும் பலருக்கும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ப்ளூ காலர் பணியாளர்கள் அலுவலகங்களுக்கு தவறாமல் வருகை தரும் மாதிரியின் கீழ் டாடா ஸ்டீல் செயல்படுகிறது. எனினும் ஓயிட் காலர் பணியாளர்களுக்கு ஒரு நெகிழ்வான பணியினை செய்ய வழிவகுக்கும்.
எல்டிஐமைண்ட்ட்ரீ
தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது வீட்டில் இருந்து பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஐடி நிறுவனமான எல்டிஐமைண்ட் ட்ரீ வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, வீடு, அலுவலகம் என மாற்றி பணிபுரிந்து கொள்ளலாம். எனினும் தற்போது 100% ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். எனினும் நிறுவனம் ஊழியர்களின் கோரிக்கை மற்றும் தேவைக்கு ஏற்ப ஹைபிரிட் மாடல் குறித்து யோசிக்கலாம் என தெரிவித்துள்ளது.
பிளெக்ஸிபிள் பணியமர்த்தல்
நிறுவனங்களின் பிளெக்ஸிபிள் பணியமர்த்தல் திட்டமானது திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள வழிவகுக்கலாம்.
ஹெச் பி நடத்திய ஆய்வில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது ஒர்க் லைஃப் பேலன்ஸை சரியாக வைத்துக் கொள்ள 92% பேர் விரும்புவதாகவும், 88% பேர் தக்க வைத்துக் கொள்ளவும், 72% பேர் அதிக உற்பத்தி திறன் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications