அதெல்லாம் நமக்கு செட்டே ஆகாது.. சுய மாடல்களை உருவாக்குங்கள்.. ஸ்ரீதர் வேம்பு நறுக்..!

உலக அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் உலக நாடுகள் பலவும் மந்த நிலைக்கு செல்லலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் கூட பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன.

இதற்கிடையில் பணவீக்கம் உச்சம் எட்டி வரும் நிலையில், தொடர்ந்து பல்வேறு நாடுகளின் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன.

இப்படியொரு மந்த நிலைக்கு மத்தியில் ட்விட்டர், மெட்டா மற்றும் அமேசான் என உலகின் பல டெக் நிறுவனங்களும் அதன் தாக்கத்தினை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் தான் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

டெக் ஊழியர்கள் கவலை

டெக் ஊழியர்கள் கவலை

இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த நிலை தொடருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு

இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு

சர்வதேச நிறுவனங்களின் இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு மத்தியில், இந்திய ஊழியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சிலிக்கன் வேலி மாடல் என்றும் கூறியுள்ளார். அமெரிக்க நிறுவனங்களின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன. இந்த சுழற்சி முறையில் ஏற்ற இறக்கம் என்பது இருப்பது தான் என்பதை பலரும் அறிவார்கள்.எனினும் இந்த முறையால் இந்தியர்களுக்கு தான் அதிக பாதிப்பு.

மாற்று வழியினை கையாளனும்

மாற்று வழியினை கையாளனும்

ஆக இந்த சிலிக்கான் வேலியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம். எனினும் அதனை செயல்படுத்த முடியாது. மாறாக நமது நிறுவனங்கள் மாற்று வழியினை கையாள வேண்டும். வேறு வழியினை கட்டமைக்க வேண்டும். திறமையான ஊழியர்களை பணிக்கு சேர்த்து கொண்டு அதன் மூலம் பலனடையும் நிறுவனங்கள், அதன் மூலம் பெரியளவில் வளர்ச்சியும் காண்பார்கள்.

சுயமாக ஒரு மாடலை உருவாக்கனும்

சுயமாக ஒரு மாடலை உருவாக்கனும்

ஆனால் பிரச்சனை எனும்போது அவர்களை பணியில் இருந்தும் நீக்குவார்கள். இது தான் அவர்களின் மாடல். ஆனால் இதெல்லாம் நமக்கு சரிவராது. ஆக நாம் நமக்காக சுயமாக ஒரு மாடலை உருவாக்க வேண்டும். ஜோஹோ அப்படித் தான் இயங்கி வருகின்றது. கிராமப்புற இளைஞர்களை மெயின் ஸ்ட்ரீமுக்கு கொண்டு வர வேண்டும். ஆரம்பத்தில் இது முடியுமா? என்ற கேள்வி எங்களிடம் இருந்தது. ஆனால் அதனை சாத்தியமாக்கி உள்ளோம் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

சிலிக்கான் வேலியை பின்பற்ற வேண்டாம்

சிலிக்கான் வேலியை பின்பற்ற வேண்டாம்

சிலிக்கான் வேலியில் பெரிய ஏற்றம் என்பது அடுத்ததாக மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்தியாவில் இந்தளவுக்கு ஊழியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை. சிலிக்கான் வேலி மாடலை பின்பற்றியதால் தான் நாம் இந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்துள்ளோம். ஆக நாம் நமக்கென ஒரு மாடலை உருவாக்க வேண்டும்.

வேதனையானது தான்

வேதனையானது தான்

சிலிக்கான் வேலியில் இருந்து நாம் எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கு கற்றுக் கொண்ட படிப்பினைகளை இங்கு செயல்படுத்த முடியாது. ஆனால் வேறுவிதமாக இங்கு உருவாக்க வேண்டும். தற்போதைய பணி நீக்கம் என்பது அவசியமான ஒன்று தான். இது வேதனையானது தான். ஆனால் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு ஏற்றவாறு நாம் நிறுவங்களை உருவாக்க வேண்டும்.

இது தான் அவசியம்

இது தான் அவசியம்

ஜோஹோ ஒரு தயாரிப்பினை சிறிய அளவில் உருவாக்கியது. அதில் ஓரளவு லாபமும் கிடைத்தது. அதிக திறன்களை உருவாக்குவதில் நாங்கள் முதலீடு செய்கிறோம். இதையெல்லாம் நம்மால் உருவாக்க முடியும் என்று பலரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இது சீரான பயணத்தை கொண்டு செல்ல இது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+