டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பேசிய போது, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்பர் மீது 50% வரி விதிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட காப்பர் சுரங்க நிறுவனங்களின் பங்குகள் ஜூலை 9ஆம் தேதி வர்த்தகத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் காப்பர் விலைகளை 12%க்கும் மேல் உயர்த்தியதோடு, உலகளாவிய காப்பர் விலை அளவுகோலான LME காப்பர் விலைகளை வீழ்ச்சியடையச் செய்ததுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி காப்பர் சுரங்க நிறுவனங்களான வேதாந்தா, ஹிந்துஸ்தான் காப்பர் மற்றும் ஹின்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் இந்த அறிவிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

ஜூலை 8ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டிரம்ப், "காப்பர் இறக்குமதிக்கு 50% வரி விதிக்க உள்ளோம்," என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சந்தை கணிப்புகளை காட்டிலும் அதிகமாகும். ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை காட்டிலும் அதிக வரி காப்பர் மீது விதிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லட்நிக், CNBC-க்கு அளித்த பேட்டியில், இந்த வரி ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று உறுதிப்படுத்தினார். மேலும், டிரம்ப் இந்த வரி தொடர்பான விவரங்களை தனது ட்ரூத் சோஷியல் ஊடக தளத்தில்வெளியிடுவார் என்றும் லட்நிக் கூறினார்.
இந்த வரி, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தித் துறையை பாதுகாக்கும் திட்டத்துடன் கொண்டு வரப்பட்டாலும் இது அமெரிக்காவில் பொருட்கள் விலையை உயர்த்தி பணவீக்க அளவுகளை பாதிக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் காப்பர் சுரங்க நிறுவனங்களான வேதாந்தா, ஹிந்துஸ்தான் காப்பர் மற்றும் ஹிந்தால்கோ, உலகளாவிய காப்பர் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேதாந்தாவின் 2024-25 நிதியாண்டு அறிக்கையின்படி, இந்நிறுவனம் 1.01 மில்லியன் டன் காப்பர் உற்பத்தி செய்து. இதன் மூலம் இந்நிறுவனத்திற்கு 7,021 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றதுள்ளது.
ஆனால், அமெரிக்காவின் புதிய வரி, இந்த நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாயை பாதிக்கலாம், குறிப்பாக அமெரிக்க சந்தையில் போட்டித்தன்மையை இழக்க நேரிடலாம். இந்திய நிறுவனங்கள், மாற்று சந்தைகளை ஆராய்ந்து, உற்பத்தி செலவைக் குறைக்க புதிய உத்திகளை வகுக்க வேண்டியிருக்கும்.
இதன் எதிரொலியாக இன்று வேதாந்தா பங்கு விலை இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்சு சரிந்து தற்போது 3.35 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 441.30 ரூபாயாக உள்ளது. இதே நாளில் வேதாந்தா-வுக்கு மற்றொரு அடியாக அமெரிக்க ஷார்ட் செல்லரான Viceroy Research அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதோடு Viceroy Research நிறுவனம் வேதாந்தா பங்குகள் மீது ஷார்ட் பொஷின் வைத்துள்ளது என்பதையும் தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால் வேதாந்தா பங்குகள் 420ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
இதேபோல் ஹிந்துஸ்தான் காப்பர் பங்குகளின் மதிப்பு 3.93 சதவீதம் சரிந்து 263.00 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. மேலும் ஹூன்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.64 சதவீதம் சரிந்து 674.65 ரூபாயாக் வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications