உலகளவில் சிறந்த மதுபானம் எது என்பது குறித்து அவ்வப்போது போட்டிகள் நடத்தப்படுவது உண்டு. அப்படி லண்டனில் உலகின் சிறந்த வகை ஜின் எது என்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்திய நிறுவனத்தின் ஜின் வெற்றி பெற்றுள்ளது.
London Spirits Competition 2025 என்ற தலைப்பில் லண்டனில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் ஜின் ஜிஜி (Jin Jiji) மதுபானம், 98 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. மேலும் Spirit of the Year என்ற பட்டத்தையும் பெற்றது. இதன் மூலம் உலகளவில் அதிக புள்ளிகள் பெற்ற சிறந்த வகை மதுபானம் என்ற பெருமை இந்திய நிறுவனத்தின் ஜின் ஜிஜிக்கு கிடைத்துள்ளது.

இந்த போட்டியில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மதுபானங்கள் பங்கேற்க வைக்கப்பட்டன. இதில் சிறந்ததாக ஜின் ஜிஜி தேர்வாகியுள்ளது. Jin Jiji India Dry Gin என பெயர் கொண்ட இந்த மதுபானம் உள்நாட்டில் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது. டார்ஜிலிங் டீ, ஹிமாலயன் ஜூனிபர், துளசி, செவ்வந்தி மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சில தாவரங்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
சீரான சுவை கொண்டதாகவும் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இதனை தயாரித்திருப்பதாக ஜின் ஜிஜியை தயாரித்த பீக் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் அன்ஸ் கன்னா கூறியுள்ளார். இந்த அங்கீகாரம் இந்தியாவின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என பெருமிதம் கொண்டார். இந்திய கைவினை கலைக்கு கிடைத்த கௌரவம் என கூறியுள்ளார்.
ஜின் ஜிஜி ஏற்கனவே பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளது. லண்டன் போட்டியில் கிடைத்துள்ள அங்கீகாரம் இதனை இன்னும் பல நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கும். இந்த மதுபானம் தற்போதைக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் சந்தைகளில் கிடைக்கிறது.
லண்டன் மதுபான போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் தங்களின் விஸ்கி , ஜின், ரம் உள்ளிட்ட மதுபானங்களை போட்டியில் பங்கேற்க வைத்தனர். மதுபான வர்த்தக நெட்வொர்க்கால் ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இது பிராண்டுகளின் தரம், மதுபானத்தின் தரம், சுவை, தயாரிக்கும் முறை, பேக்கேஜிங் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சிறந்த மதுபானத்தை தேர்வு செய்கிறது.
இந்த ஆண்டு போட்டியில் Paul John Indian Single Malt Whiskey , Seagram's Longitude 77 Indian Single Malt Whisky , Amrut Master Distiller's Reserve 2024 whisky , Jaisalmer - Indian Craft Gin , Barrel Aged Feni - Sentari ஆகிய மதுபானங்களும் சிறந்த மதுபானங்களாக தேர்வாகின.


Click it and Unblock the Notifications