இந்தியர்கள் வங்கி கணக்கில் பணத்தை கொட்டும் டிவிட்டர்.. எலான் மஸ்க் ஆட்டம் சூடு பிடித்தது..!

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மக்கள் தங்களுடைய பெரும்பாலான ஓய்வு நேரத்தை சமுகவலைத்தளத்தில் செலவு செய்யும் காரணத்தால் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் இதை பணமாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் தங்களுடைய விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல முயற்சிகளை செய்து வருகிறது.

இப்படி பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் வரிசையில் டிவிட்டரும் தனது தளத்தில் கன்டென்ட் எண்ணிக்கையை அதிகரிக்க தனது விளம்பர வருவாயின் ஒரு பகுதியை அதன் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் அளிக்கிறது. இத்தகைய திட்டம் பேஸ்புக், யூடியூப் தளத்தில் பல வருடங்களாக இருந்து வரும் வேளையில் கடந்த மாதம் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் (X தளம்) ad revenue-sharing திட்டத்தை தனது தளத்தின் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அறிமுகம் செய்தது.

இந்தியர்கள் வங்கி கணக்கில் பணத்தை கொட்டும் டிவிட்டர்.. எலான் மஸ்க் ஆட்டம் சூடு பிடித்தது..!

இந்த நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் கன்டென்ட் கிரியேட்டர்கள், influencer-கள் ஜூலை மாதம் முதல் டிவிட்டரில் அதிகப்படியான கன்டென்ட்டை பதிவிட துவங்கினர். இதன் வாயிலாக அமெரிக்கா முதல் இந்தியா வரையில் இருக்கும் கன்டென்ட் கிரியேட்டர்கள் வங்கி கணக்கில் டிவிட்டரில் பணம் டெபாசிட் செய்துள்ளது.

ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து இந்திய கிரியேட்டர்களும் டிவிட்டர் தளத்தில் இருந்து வருமானம் பெற துவங்கியுள்ளனர். முதல் முறையாக டிவிட்டரில் இருந்து பணத்தை பெற்றவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் வங்கி கணக்கில் வந்த பணத்தின் ஸ்கிரீன்ஷாட்-ஐ டிவிட்டர் தளத்திலேயே பகிர்ந்துள்ளனர்.

உதாரணமாக Hood ஆப் நிறுவனத்தின் துணை நிறுவனர் அபிஷேக் ஆஸ்தானா Gabbar என்ற பெயரில் இயங்கி வரும் வேளையில் இவருக்கு 1.4 மில்லியன் பாலோவர்களை கொண்டு உள்ளார். இந்த நிலையில் டிவிட்டரில் இருந்து 2,09,282 ரூபாய் தொகை பெற்றதாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதேபோல் Maithun என்பவர் டிவிட்டரில் இருந்து 3,51,000 ரூபாய் தன்னுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளதாக ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் டிவிட்டரிலும் இனி அதிகப்படியான கன்டென்ட் கிரியேட்டர்கள் கூட்டம் திரும்பும், இனி வீடியோ, போட்டோ, டெக்ஸ்ட் பதிவு என டிவிட்டரில் அதிகப்படியான பதிவுகள் வரும். இதன் மூலம் டிவிட்டரில் யூசர் என்கேஜ்மென்ட் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் டிவிட்டரின் விளம்பர வருவாயும் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+