இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பணம் பரிமாற்ற முறைகள் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. சொல்லப்போனால் இந்திய அரசுக்கு சொந்தமான UPI தளத்தின் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு கூட ரியல் டைமில் பணத்தை செலுத்தும் முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் பண புழக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது கண்முன்னே தெரிந்தாலும், ரூபாய் நோட்டுகல் இன்னும் அதிகளவில் புழக்கத்தில் தான் உள்ளன. பல இடங்களில் இன்னும் பணம் தான் கிங் ஆக உள்ளது, அதிலும் குறிப்பாக பெரும் தொகையில் பண பரிமாற்றம் செய்யும் போது பணம் தான் 99 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி ரூபாய் நோட்டுகளை தினமும் பயன்படுத்தி வரும் நாம், இந்த ரூபாய் நோட்டுகளை எதனால் செய்யப்படுகிறது என்பது தெரியுமா..? பேப்பர் தான் என நீங்கள் சொன்னால் கட்டாயம் இல்லை.

இந்திய ரூபாய் நோட்டுகள்
இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதத்தால் செய்யப்பட்டவை என்று நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம், ஆனால் அது உண்மையல்ல. பேப்பரால் செய்யப்பட்டால் கட்டாயம் குறுகிய காலக்கட்டத்திலேயே எளிதாக கிழியும், இதேபோல் தண்ணீரில் போட்டால் ரூபாய் நோட்டு எளிதில் கிழிந்து விடும். ஆனால் ரூபாய் நோட்டுகள் தண்ணீர் பட்டால் கூட பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்வது இல்லை. பேப்பர் இல்லை என்றால் இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகிறது..?
தேய்மானம் மற்றும் கிழிவும் தன்மை
தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. தேய்மானம் மற்றும் கிழிவும் தன்மை காரணமாக, இவை பெரும்பாலும் அழுக்காகிவிடுகின்றன அல்லது கிழிந்துவிடுகின்றன. இதனால் அனைவரும் ரூபாய் நோட்டுகளை காகிதத்தால் தான் உருவாக்க பயன்படுகிறது என்று நம்மை வைக்கிறது.
காகிதம் இல்லை
இந்திய ரிசர்வ் வங்கியின் படி, இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிட காகிதம் பயன்படுத்தப்படுவது அல்ல, 100% பருத்தி பயன்படுத்தப்படுகிறது. காகிதத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நோட்டுகளைக் காட்டிலும் பருத்தியால் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை அதிக காலம் நீடித்து பயன்படுத்த முடியும். அன்றாடப் பயன்பாட்டிலிருந்து சேதமடைவதை காக்கிறது.
பருத்தி
பருத்தி மூலம் ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் போது விரைவான தேய்மானத்தை தடுப்பது மட்டும் அல்லாமல் எடை குறைந்ததாக்குகிறது மற்றும் போலியாக தயாரிப்பதில் அதிகபடியான தடைகளை உருவாக்கிறது.
பாதுகாப்பு தன்மை
இந்திய ரூபாய் நோட்டுகளில் இயந்திரத்தால் மட்டும் பார்க்ககூடிய பாதுகாப்பு நூல், ரிசர்வ் வங்கி முத்திரை, ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் கையொப்பம், சீ-த்ரூ பதிவு, வாட்டர்மார்க் மற்றும் எலக்ட்ரோடைப் வாட்டர்மார்க், மைக்ரோ எழுத்துகள் மற்றும் மறைந்திருக்கும் காந்தி படம் போன்றவற்றை எளிதாக இந்த பருத்தியால் செய்யப்பட்ட தாளில்களில் கொண்டு வர முடிகிறது. காகிதத்தில் இத்தகைய பாதுகாப்பு தன்மையை கொண்டு வருவது கடினம்.
அமெரிக்க டாலர்
இந்தியா மட்டும் அல்லாமல் அமெகிக்கா போன்ற பல நாடுகள் இத்தகைய பருத்தியால் செய்யப்பட்ட இழைகளில் தான் நாணயங்களை அச்சிடுகிறது. அமெரிக்க அரசு அமெரிக்க டாலரை 25 சதவீத லெனின், 75 சதவீத காட்டன் கலப்பு கொண்ட இழைகளில் அச்சிடப்படுகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

Click it and Unblock the Notifications