தங்கம், வெள்ளியை அடுத்து மூன்றாவது உலோகமாக மக்கள் விரும்பி வாங்குவது வைரம் தான்.
பெரும்பாலும் பணக்காரர்கள் மட்டுமே வைரங்களை வாங்குவார்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது நடுத்தர வர்க்கத்தினரின் பார்வையும் வைரத்தின் மீது விழுந்துள்ளது.
இந்த நிலையில் உலக சந்தையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது என தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சிலின் தலைவர் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிற்கு ஒரு பெருமையானதாக கருதப்படுகிறது.
தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில்
கொரோனா வைரஸ் பாதிப்பின் போது உலக அளவில் வைர சந்தை மிகவும் மோசமாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டு வருவதால் வைர வியாபாரத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில் தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தங்கம் - வெள்ளி - வைரம்
உலக அளவில் உள்ள பெண்கள் ஆடம்பரமான பொருட்கள் மற்றும் ஐபோன்களை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தங்கம், வெள்ளி, வைரம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களையும் வாங்க ஆரம்பித்து உள்ளார்கள் என்பது ஆரோக்கியமான வளர்ச்சி என்று அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
வைர ஷோரூம்கள்
உலக அளவில் தற்போது வைரத்தின் தேவை அதிகரித்துள்ளது என்றும் இதனால் வைர வியாபாரம் எதிர்பார்ப்பையும் தாண்டி நல்ல நிலையில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது ஷோரூம்கள் தங்கம், வெள்ளி மட்டுமின்றி வைரத்திற்கு என தனிப்பிரிவுகள் பல கடைகளில் ஆரம்பித்துள்ளது வைர வியாபார துறையில் ஒரு நல்ல வளர்ச்சி என டேவிட் கெல்லி தெரிவித்தார்.
ஆன்லைனில் வைரம்
மேலும் ஷோரூம்களில் மட்டுமின்றி ஆன்லைனிலும் வைர வியாபாரமும் செய்யப்படுவதாகவும் இது வைர வியாபாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்றும் வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா - சீனா
உலக அளவில் வைர வியாபாரத்தில் நம்பர் ஒன் இடத்தில் அமெரிக்கா தான் உள்ளது. அந்நாடு உலக வைர சந்தையில் சுமார் 50% வைரத்தை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவை அடுத்து வைரச்சந்தையில் சீனா உள்ளது. அந்நாடு உலக அளவில் 16 முதல் 17 சதவீதம் வரை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவின் வைரச்சந்தை
அமெரிக்கா, சீனாவை அடுத்து உலக வைரசந்தையில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது 5 முதல் 6 சதவீதம் வைரங்களை இந்தியா விற்பனை செய்து வந்தாலும் வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்கள்
இன்றைய காலத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் இளம் பெண்கள் வைர நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறும் இந்திய வைர வியாபாரிகள், தங்கம் நமது பாரம்பரியமான மற்றும் சேமிப்பு உலோகமாக இருந்தாலும் இளம் பெண்கள் தற்போது வைரத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் வாங்கிய வைரத்தை அவர்களின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதால் வைரத்தை வாங்க வேண்டும் என்ற இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஆய்வக வைரம்
மண்ணில் வெட்டி வெட்டி எடுக்கும் வைரங்கள் தவிர ஆய்வகத்தில் செய்யப்படும் வைரங்களுக்கும் உலக அளவில் ஒரு தனி இடம் கிடைத்து வருகிறது என்றும் இது வைர வியாபார சந்தையில் ஒரு மிகச்சிறந்த அம்சமாகவே பார்க்கப்படுகிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications