இந்திய முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தால். இந்த அறிக்கையில் இப்பிரிவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வளர்ச்சி பாதிப்புகளை கருத்தில் கொண்டு 2026 நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி துறை குறித்து முக்கியமான சில தரவுகள் பகிரப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவான முன்னேற்றம் கண்டு வருவதைக் குறிக்கும் பல்வேறு அறிகுறிகள் தென்படுவதாக மத்திய அரசு நம்புகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையில் வங்கித்துறை நிலைத்தன்மை மேம்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் பதிவு செய்யப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன்கள் விகிதம் (Gross Non-Performing Assets - GNPA) கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது. 2018 நிதியாண்டில் உச்சத்தை எட்டிய இதன் அளவீடு, 2024 செப்டம்பர் மாத இறுதியில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது வங்கிகளின் நிதி நிலைமை மேம்பட்டு வருவதையும், கடன் வழங்கும் திறன் அதிகரித்து வருவதையும் குறிக்கிறது.
மேலும், கிராமப்புற நிதி நிறுவனங்கள், நிதி சேவைகளுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் நிதி சேவைகள் மேம்பட்டு, கிராமப்புற மக்கள் வங்கி சேவைகளை எளிதாக பெறும்வாய்ப்பு உருவாகியுள்ளது. இது கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் துரிதப்படுத்துகிறது.
இந்தியாவின் பங்குச் சந்தையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மூலதன சந்தை மதிப்பு (BSE stock market capitalisation) மற்றும் நாட்டின் ஜிடிபி மத்தியிலான விகிதம் 136 சதவீதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் stock market capitalisation to GDP ratio கணிசமாக அதிகரித்துள்ளது. சீனா (65 சதவீதம்) மற்றும் பிரேசில் (37 சதவீதம்) போன்ற பிற வளரும் பொருளாதாரங்களை விட இந்தியாவின் அளவு 136 சதவீதம் என்ற உச்ச நிலையில் உள்ளது. இது இந்தியாவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும், பொருளாதாரத்தில் முதலீடுகள் அதிகரித்து வருவதையும் குறிக்கிறது.
இதேபோல் இந்தியாவின் காப்பீட்டுத் துறையும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024 நிதியாண்டில் மொத்த காப்பீட்டு பிரீமியம் 7.7 சதவீதம் அதிகரித்து, ரூ.11.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது மக்கள் தங்கள் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவின் ஓய்வூதியத் துறையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஓய்வூதிய திட்ட உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மக்கள் தங்கள் ஓய்வு காலத்திற்கு நிதி திட்டமிடலில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications