வல்லரசு நாடுகள் என்ற பெயரில் காலரை தூக்கிவிட்டுச் சுத்திக்கொண்டு இருந்த பல நாடுகள் இன்று கொரோனாவின் பிடியில் கதறிக்கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மட்டுமல்லாமல் அரசும் பயந்து போய் கிடக்கிறது.
இந்நிலையில் உலகின் முன்னணி நிதி சேவை மற்றும் முதலீட்டு நிறுவனமான நோமுரா, இந்தக் கொரோனா தாக்கத்தால் எந்த நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்குப் பாதிக்கப்படும் எனக் காலாண்டு வாரியாகப் பட்டியலிட்டு அதிரவைத்துள்ளது.
இந்தியா
இந்திய அரசு தற்போது அறிவித்துள்ள 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டின் 75 சதவீத பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதன் மூலம் 2020ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் குறைந்து இந்த வருடத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது நோமுரா.
2020-21 நிதியாண்டு
இந்தியா கொரோனாவின் மோசமான பிடியில் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டால் 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.0 சதவீதமும், 2வது காலாண்டில் -10.3 சதவீத பொருளாதாரச் சரிவு (எதிர்மறை வளர்ச்சி), 3வது காலாண்டில் -2.2 சதவீத பொருளாதாரச் சரிவு, 4வது காலாண்டில் -0.8 சதவீத பொருளாதாரச் சரிவு என மொத்த 2021ஆம் நிதியாண்டில் -2.6 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும்.
அதாவது தற்போது இருக்கும் 4.5 சதவீத வளர்ச்சியில் இருந்து -2.6 சதவீத பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும்.
என்ன நடக்கும்..?
இந்தியா எதிர்பாராத விதமாகக் கொரோனா மூலம் கொடூரமாகப் பாதிக்கப்பட்டால் நாட்டில் குறைந்தபட்சம் 50 சதவீத வேலைவாய்ப்புகள் காணாமல் போகும், விலைவாசி கடுமையாக உயரும், வங்கிகள் திவாலாகக் கூட வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 100 ரூபாய் கூடத் தாண்டும் (அமெரிக்காவும் இதனால் அதிகமாகப் பாதிக்குப்படும் என்பதால் ரூபாய் மதிப்பில் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது எனத் தெரிகிறது.) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு 20,000க்கும் குறைவான புள்ளிகளை அடையும்.
பிற நாடுகள்
தற்போதைய பொருளாதாரக் கணிப்புகளுடன், கொரோனா பாதிப்பு மோசமான நிலையை அடைந்தால் ஒவ்வொரு நாடும் எந்த அளவிற்குப் பாதிக்கப்படும் என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சி, தற்போது 2.3 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாக்குப் பின்னர்ச் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமான நிலையை அடைந்தால் -6.9 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடையும் என நோமுரா கணித்துள்ளது.
அமெரிக்கா
வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி, தற்போது 1.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாக்கு பின்னர் அமெரிக்காவின் பொருளாதாரம் -11.3 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடையும் என நோமுரா கணித்துள்ளது.
ஆசியா நாடுகளின் வளர்ச்சி விகிதங்கள்
ஜப்பான்
தற்போதைய அளவீடு: -0.7 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -8.2 சதவீதம்
ஆஸ்திரேலியா
தற்போதைய அளவீடு: 1.6 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -3.3 சதவீதம்
சீனா
தற்போதைய அளவீடு: 4.8 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: 0.0 சதவீதம்
ஹாங்காங்
தற்போதைய அளவீடு: -2.3 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -12.4 சதவீதம்
இந்தோனேசியா
தற்போதைய அளவீடு: 4.3 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -3.5 சதவீதம்
பிலிப்பைன்ஸ்
தற்போதைய அளவீடு: 5.6 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -1.9 சதவீதம்
சிங்கப்பூர்
தற்போதைய அளவீடு: 0.0 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -9.8 சதவீதம்
தென் கொரியா
தற்போதைய அளவீடு: 1.4 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -12.2 சதவீதம்
தாய்லாந்து
தற்போதைய அளவீடு: 1.4 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -10.1 சதவீதம்
ஐரோப்பா நாடுகளின் வளர்ச்சி விகிதங்கள்
பிரான்ஸ்
தற்போதைய அளவீடு: -0.6 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -14.0 சதவீதம்
ஜெர்மனி
தற்போதைய அளவீடு: -1.1 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -13.0 சதவீதம்
இத்தாலி
தற்போதைய அளவீடு: -2.1 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -16.3 சதவீதம்
ஸ்பெயின்
தற்போதைய அளவீடு: 0.2 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -13.8 சதவீதம்
பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு
ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிந்த நிலையில் இந்த ஆண்டு 2021ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாகத் தான் இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் பிரிட்டனை பாதித்துள்ளது.
தற்போதைய அளவீடு: -0.7 சதவீதம்
கொரோனா-க்குப் பின்: -13.3 சதவீதம்


Click it and Unblock the Notifications