கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வரும் இந்தியப் பொருளாதாரம் எரிபொருள் விலை உயர்வு, நிலக்கரி பிரச்சனை எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டாலும் பண்டிகை கால வர்த்தகம் இந்தத் தாக்கத்தைத் தனித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் அமைப்பின் துணை தலைவரான ராஜீவ் குமார் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நித்தி அயோக்
நித்தி அயோக் அமைப்பின் துணை தலைவரான ராஜீவ் குமார் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்யும், அதேபோல் அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் குமார்
ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நித்தி அயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் கடந்த 7 வருட மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை உறுதியாகக் கட்டமைத்துள்ளது. இதன் மூலம் இந்திய வர்த்தகச் சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று
ஆனால் கடந்த 2 வருடத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் சில தடுமாற்றங்கள் இருந்தது. ஐஎம்எப் அமைப்பு 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கூறியுள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ஐஎம்எப் அமைப்பு
மேலும் ஐஎம்எப் அடுத்த 5 வருடத்தில் உலகிலேயே வேகமான வளரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கும் எனக் கணித்துள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ராஜீவ் குமார் இந்திய பொருளாதாரம் 10 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடையும் எனக் கூறிய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதைப் பாருங்கள்.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவீடு 10.5 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் ஐபிஎம் 2021ல் 9.5 சதவீதம், 2022ல் 8.5 சதவீதம் வரையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications