இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, கடந்த ஜூன் 2020 காலாண்டில் 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. அடுத்தடுத்த காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி எவ்வளவு சரிவைக் காணலாம்? இந்த 2020 - 21 முழு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி எவ்வளவு சரியலாம் என ICRA ரேட்டிங் நிறுவனம் கணித்து இருக்கிறது.
ICRA ரேட்டிங் நிறுவனம், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 11 சதவிகிதம் வரை சரியலாம் எனக் கணித்து இருக்கிறது. இதற்கு முந்தைய கணிப்பில் 2020 - 21 முழு நிதி ஆண்டுக்கு 9.5 சதவிகிதம் வரை சரியலாம் எனக் கணித்து இருந்தது ICRA.
அதே போல அடுத்த மூன்று காலாண்டுகளிலும், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, எவ்வளவு சரியலாம் எனக் கணித்து இருக்கிறது ICRA.
செப்டம்பர் காலாண்டில் -12.4 % சரியலாம்
2020 - 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (செப்டம்பர் 2020) இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி12.4 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருக்கிறது. 2020 - 21 நிதி ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி சரியலாம் எனக் கணித்து இருக்கிறது.
டிசம்பர் காலாண்டில் -5.4 %
2020 - 21 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (டிசம்பர் 2020) இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 5.4 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருக்கிறது ICRA. இதற்கு முன் 2.3 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருந்தது இங்கு நினைவு கூறத்தக்கது.
மார்ச் 2021 காலாண்டில் -2.5%
2020 - 21 நிதி ஆண்டின் நான்காம் கலாண்டில் (மார்ச் 2021), இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 2.5 சதவிகிதம் சரிவைக் காணலாம் எனக் கணித்து இருக்கிறது இக்ரா. இதற்கு முந்தைய கணிப்பில், 1.3 சதவிகிதம் வளர்ச்சி காணலாம் எனக் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காரணம்
இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைத் தாண்டி விட்டது. ஒவ்வொரு நாளும் சுமாராக 80,000 முதல் 90,000 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த காரணத்தால் தான் இக்ரா ரேட்டிங் நிறுவனம், இந்தியாவின் ஜிடிபி சரிவு அதிகரிக்கலாம் எனக் கணித்து இருக்கிறது.
எந்த செக்டார்கள் பாதிக்கப்படும்
கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, ஓட்டல், கம்யூனிகேஷன், பிராட்காஸ்டிங் தொடர்பான சேவைகள் எல்லாம், கொரோனா பாதிப்பில் இருந்து மெதுவாகத் தான் பழைய நிலைக்கு வரும் எனச் சொல்லி இருக்கிறது இக்ரா ரேட்டிங் கம்பெனி. இந்த துறைகளின் ஜிவிஏ, 2020 - 21 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் கூட சரிவைக் காணலாம் எனச் சொல்லி இருக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications