மத்திய நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் 2023ஆம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய பொருளாதாரம் 2022-23ஆம் நிதியாண்டில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்றாலும், பணவீக்கம் என்பது பெரும் பிரச்சனையா உள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பணவீக்கம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து பணவீக்க பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மீண்டும் புதிய பணவீக்க பாதிப்புகள் வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரையில் உருவாகியுள்ளது. இதில் இந்திய பொருளாதாரமும் பாதிக்க உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால் 2022 - 23 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் பெரும் சுமையாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
அணுகும் முறை
இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருக்க முக்கியமான காரணம் மத்திய அரசு அணுகும் முறை தான். ஏற்கனவே திட்டமிட்டப்பட்டி உறுதியாக நிற்காமல், மத்திய அரசு ஒருபக்கம் ஆபத்துகளைக் களையும் உக்தியை கொண்டு மறு கையில் பேசியன் அடிப்படையிலான தகவல்களை வைத்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பார்பெல் திட்டம்
இந்தப் பார்பெல் திட்டம் பற்றிக் கடந்த ஆண்டு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் விவாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த முடிவுகளை எடுக்க 80 HFI குறியீடுகளை வைத்து Agile முறையில் முடிவு எடுக்கப்படுகிறது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சப்ளை துறை பிரச்சனை
தற்போது இந்தியாவில் சப்ளை துறையில் இருந்த பல பிரச்சனை தீர்க்கப்பட்டு உள்ள வேளையில் மத்திய அரசு அதிகளவில் வளர்ச்சி திட்டத்திற்காக முதலீடு செய்து வருகிறது. இதனால் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்தியப் பொருளாதாரம் தயாராக உள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது,
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications