இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த அளவு சரிவைக் காணா விட்டாலும், -7.5% சரிந்துள்ளது.
இதுவே முதல் காலாண்டில் -23.9% சரிந்திருந்தது. இந்த நிலையில் இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக சரிவை கண்டுள்ளது மிகவும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
எனினும், நிபுணர்களின் பல்வேறு கணிப்புகளையும் தாண்டி -7.5% மட்டுமே சரிந்துள்ளது கவனிக்கதக்கது.
பொருளாதாரம் வாஷ்அவுட்
இதற்கிடையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியான ஒரு செய்தியில், இந்திய பொருளாதாரத்தினை நடப்பு ஆண்டில் கொரோனா வைரஸ் வாஷ்அவுட் செய்து விடும். ஆனால் அடுத்த நிதியாண்டில் (2022ல்) 10% வளர்ச்சி காணலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். நடப்பு ஆண்டில் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக முற்றிலும் முடங்கின.
ஆதரவு தரும் காரணிகள்
ஆனால் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதோடு பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகளும் மேம்பட்டு வருகின்றன. மேலும் கொரோனாவின் தாக்கம் இருந்தாலும் தொழில்துறைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது காலாண்டில் எப்படி?
நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சாதகமாக எதிர்பார்க்கப்பட்டாலும், முந்தைய காலாண்டுகளின் வீழ்ச்சி அதனை ஆட்கொள்ளும். இதன் காரணமாக நடப்பு ஆண்டில் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பொருளாதார வளர்ச்சி சற்று சரிவில் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி விகிதம் 2.5% சரிந்துள்ளது. இதே வேலையின்மை குறித்தான அறிவிப்புகளும் சாதகமாக இல்லை. ஆக இன்னும் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய்
இந்த கொரோனா காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துள்ள நிலையில், அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்துள்ளது. இதனால் நிதிபற்றாக்குறை அதிகரிக்கும் நிலை நிலவி வருகிறது. எப்படி இருப்பினும் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்ப்புகளையும் மீறி வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளது. அதாவது வீழ்ச்சியே கண்டிருந்தாலும், அது எதிர்பார்பினை விட குறைந்துள்ளது.
வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம்
இந்த கொரோனா காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துள்ள நிலையில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்துள்ளது. இதனால் நிதிபற்றாக்குறை அதிகரிக்கும் நிலை நிலவி வருகிறது. எப்படி இருப்பினும் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்ப்புகளையும் மீறி வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளது. அதாவது வீழ்ச்சியே கண்டிருந்தாலும், அது எதிர்பார்பினை விட குறைந்த அளவேயாகும்.
முக்கிய துறைகள் முடக்கம்
கடந்த காலாண்டுகளில் முதலீட்டு வளர்ச்சி, சுற்றுலா துறை, போக்குவரத்து துறை, ஹாஸ்பிட்டாலிட்டி, சேவைத் துறைகள் உள்ளிட்ட சில துறைகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன, இந்த துறைகளின் தேவையும் குறைந்திருந்தது. ஆக இதுவும் கடந்த காலாண்டில் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் மேற்கண்ட இந்த துறைகள் தற்போது சற்றூ வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன.
கொரோனா தடுப்பூசி
அதன் தொடர்ச்சியாக பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம். ஆக நடப்பு நிதியாண்டின் பொருளாதாரத்தினை கொரோனா வாஷ் அவுட் செய்து விட்டது. ஆனால் 2022ம் நிதியாண்டில் 10% வளர்ச்சியினை காணலாம் என்றும் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளார்.
More From GoodReturns

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!



Click it and Unblock the Notifications