இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவிற்குப் பெட்ரோல், டீசல் முக்கியமோ அதைவிட முக்கியமானது மின்சாரம். ஆனால் இந்தியாவில் மின்சார உற்பத்தியே பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தால் உற்பத்தி தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கும் மின்சாரம் தடைபெறும். இதன் வாயிலாக நாட்டில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, விலைவாசி என அனைத்துமே பாதிக்கப்படும்.
இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்..?
ஆசிய நாடுகள்
சீனா உட்பட அனைத்து தென் ஆசிய நாடுகளிலும் தற்போது அதிகளவிலான நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் டிமாண்டு அதிகரித்துள்ளது. இதனால் நிலக்கரியின் விலை சுமார் 60 டாலரில் இருந்து 160 டாலராக அதிகரித்துள்ளது. விலை உயர்வோடு உற்பத்தியும் மந்தமான காரணத்தால் மின்சார உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது.
நிலக்கரி மின்சாரம்
இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரி பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இந்தியாவில் மழை வெள்ளம், போக்குவரத்துப் பிரச்சனை போன்ற பல காரணத்தால் நிலக்கரி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள இதே வேளையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் அதிகரித்துள்ளது.
விலை பாதிப்பு
இந்தியாவில் நேற்று வெளியான அறிவிப்பில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 20 தெர்மல் பவர் பிளான்ட் மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ள காரணத்தால் நிலக்கரி சுரங்கத்தில் அதிகளவிலான மழை நீர் புகுந்து உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
20 அனல் மின் நிலையம் மூடல்
இந்தியாவில் நேற்று வெளியான அறிவிப்பில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 20 தெர்மல் பவர் பிளான்ட் மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலைக்கு முக்கியக் காரணம் நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ள காரணத்தால் நிலக்கரி சுரங்கத்தில் அதிகளவிலான மழை நீர் புகுந்து உற்பத்தியைப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
அனல் மின் நிலையம்
இதனால் இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் மின்சார உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மூடப்பட்ட 20 தெர்மல் பவர் பிளான்ட்-ல் பஞ்சாப்-ல் 3, கேரளாவில் 4, மகாராஷ்டிராவில் 13 என மின்சார உற்பத்தி ஆலைகளை மூடப்பட்டது.
மின்சாரப் பிரச்சனை
கொரோனா தொற்றை விடவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை விடவும் மின்சார உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள பிரச்சனை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
135 அனல் மின் நிலையம்
கடந்த 4 வருடத்தில் இந்திய தெர்மல் பவர் பிளான்ட்களில் சராசரி இருப்பு அளவே 18 நாட்கள் தற்போது 2 நாட்களாகக் குறைந்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த அளவீடு 8 முதல் 10 நாட்களாக டிசம்பருக்குள் உயர வாய்ப்பு இருந்தாலும் 18 நாட்கள் அளவீட்டை அடுத்தச் சில காலாண்டுகளுக்கு அடைய முடியாது என்று கிரிசில் அமைப்பின் தலைவர் ஹேட்டல் காந்தி தெரிவித்துள்ளார்.
2 நாள் நிலக்கரி இருப்பு
கடந்த 4 வருடத்தில் இந்திய தெர்மல் பவர் பிளான்ட்களில் சராசரி இருப்பு அளவே 18 நாட்கள் தற்போது 2 நாட்களாகக் குறைந்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த அளவீடு 8 முதல் 10 நாட்களாக டிசம்பருக்குள் உயர வாய்ப்பு இருந்தாலும் 18 நாட்கள் அளவீட்டை அடுத்தச் சில காலாண்டுகளுக்கு அடைய முடியாது கிரிசில் அமைப்பின் தலைவர் ஹேட்டல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அலை
இந்தியாவில் 2வது கொரோனா தொற்று அலைக்குப் பின்பு நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கிய வேளையில் நீர், வாயு மற்றும் அணுசக்தி வாயிலாக உற்பத்தி செய்யும் மின்சாரம் குறைந்த நிலையில், நிலக்கரி உற்பத்தியும் குறைந்த காரணத்தால் சிக்கிக்கொண்டு உள்ளோம்.
இந்தியா 3வது இடம்
இந்தியாவில் அதிகளவிலான நிலக்கரி இருப்பு இருந்தாலும், உலகிலேயே அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. சர்வதேச சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
360 கோணத்திலும் பாதிப்பு
இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி 45 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ள இதேவேளையில் சர்வதேச சந்தையில் இதன் விலையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாக இந்தியாவின் மின்சார உற்பத்திக்கு 360 கோணத்திலும் பாதிப்பு உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications