இந்திய பொருளாதாரம் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் வரலாறு காணாத வகையில் -23.9 சதவீதம் வரையில் சரிந்தது அனைவருக்கும் தெரியும். உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் இந்தியாவின் இந்த வீழ்ச்சி மிகப்பெரியதாகப் பார்க்கப்படும் நிலையில், பல்வேறு நிதி மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள கணிப்புகளைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசு இந்திய பொருளாதாரம் V Shaped அதாவது ஜூன் காலாண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து தடாலடியாக உயரும் எனக் கூறிவரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் எப்படியிருக்கும் என்பது குறித்துப் பல்வேறு நிதி மற்றும் பொருளாதார அமைப்புகள் தங்களது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆய்வுகளின் முடிவுகளைப் பார்த்தால் இந்தியா பொருளாதாரம் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
50 லட்சம் பேர்
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேவேளையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் வர்த்தகம் மற்றும் வருவாய் காரணத்தைக் காட்டி அனைத்து விதமான வர்த்தகங்களையும், துறைகளையும் இயங்க அனுமதி கொடுத்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் கொரோனா குளோபல் ஹாட்ஸ்பார்ட் பட்டியில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்றைய தரவுகள் படி 52.19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், மேலும் கொரோனாவால் 84,434 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்திய பொருளாதாரம்
கொரோனா தொற்றை இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அடுத்த சில காலாண்டுகளுக்கு நாட்டின் வர்த்தகம் துறை, உற்பத்தி துறை, மக்களின் நுகர்வு பொருட்களின் அளவீடு ஆகியவை அதிகளவில் சரியும்.
இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையின் வளர்ச்சி அளவீடுகள் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ளும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு சந்தை
ஏற்கனவே நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது, ஆம் மே மற்றும் ஆகஸ்ட் மாத காலத்தில் மட்டும் professional jobs பிரிவில் இருக்கும் 66 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர், இதேகாலகட்டத்தில் 50 லட்சம் தொழிற்சாலை ஊழியர்களும் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
அதாவது கடந்த 3 மாத காலத்தில் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் சுமார் 1.16 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
வங்கி
இதேபோல் இந்திய வங்கித் துறையும் 6 மாத கடன் சலுகைக்குப் பின் அதிகளவிலான வராக்கடனை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் வங்கி நிதி நிலைமையும் படுமோசமாக மாறும் எனக் கணிப்பு நிலவும் வேளையில் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவிலான வாய்ப்புகள் இருக்காது. இதனால் நாட்டின் பொருளாதாரம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும்.
கணிப்புகள்
2021ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படியிருக்கும் எனப் பல்வேறு அமைப்புகள் வெளியிட்டுள்ள அளவீடுகளை இப்போது பார்க்கலாம்.
- கோல்மேன் சாச்சிஸ் : -14.8%
- இந்தியா ரேட்டிங்க்ஸ் : -11.8%
- மூடிஸ் : -11.5%
- பின்ச் : -10.5%
- OECD : -10.2%
- ஆசிய வளர்ச்சி வங்கி : -9%
- கிரிசில் : -9%
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications