எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் (2023-24) 6.5 சதவீதமும் வளர்ச்சியடையும் என எஸ்&பி செப்டம்பர் மாதம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் இந்தியாவில் நிலவும் அதிகப்படியான தேவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இகுக்கும் காரணத்தால் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் குறைவான அளவிலேயே பாதிக்கும் எனத் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் கணித்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்த பின்பு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் சாதாரண 6.2 சதவீத வளர்ச்சி அளவீட்டுக்குத் திரும்பக்கூடும் நிலையில் தான் உள்ளது.
இக்காலகட்டத்தில் இந்தியாவின் பலவீனமான ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் எதிர்காலச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தியது என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டு
ஏப்ரல்-ஜூன் மாதங்களில், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 13.5 சதவீதம் என்ற சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஆனால் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இதன் அளவு 6.2 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றுப் பாதிப்பு
2021 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்பால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நிலவி வந்த காரணத்தால், 2022ல் தடாலடி வளர்ச்சி பதிவானது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே ஏப்ரல்-ஜூன் இந்தப் பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி
இதேவேலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பணவீக்கத்தை அதன் இலக்கு வரம்பான 2% முதல் 6% விட அதிகமாக இருக்கும் நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தித் தனது வட்டி விகிதங்களை உயர்த்திய காரணத்தாலும் பொருளாதாரம் வளர்ச்சி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மந்தமாக இருக்கும்.
ரெப்போ விகிதம்
இந்திய ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் சுமார் 4 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் ஏற்கனவே 1.9 சதவிகிதம் அதிகரித்து 3 ஆண்டுகளில் அதிகபட்சமாகத் தனது ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
43 பொருளாதார நிபுணர்கள்
நவம்பர் 22-28 தேதிகளில் சுமார் 43 பொருளாதார நிபுணர்களின் ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6.2 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் 6.3 சதவீத அளவீட்டை விடச் சற்றுக் குறைவு.
உலக நாடுகள்
பணவீக்கத்தைக் குறைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தனது வட்டி விகிதங்களை அதிகளவில் உயர்த்தியது மூலம் பெரும்பாலான முக்கியப் பொருளாதாரங்களில் பொருளாதாரச் செயல்பாடு பலவீனமடைந்தது. ஆனால் இந்தியாவில் ஒப்பீட்டளவில் வலுவாக உள்ளது. இது இந்தியாவுக்குப் பெரும் சாதகமான வாய்ப்பாக உள்ளது.
ரெசிஷன் - டிமாண்ட்
இதே நேரத்தில் உலக நாடுகள் மந்த நிலைக்குத் தள்ளப்படுவதால் இந்திய தயாரிப்புகளுக்கான டிமாண்ட் குறைந்து உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, வர்த்தக வாய்ப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் நடக்கும் மக்கள் போராட்டம் மூலம் உலோக சந்தை மொத்தமும் வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால் உலகளாவிய உற்பத்தியும் டிமாண்ட்-ம் குறையும் என்று கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications