உலக வங்கி முக்கிய அறிவிப்பு.. இந்திய பொருளாதாரம் 6.9% வளர்ச்சி..!

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.

இந்தியாவின் நாணய கொள்கை அறிவிப்பு, பொருட்களின் அதிகப்படியான விலை ஆகியவற்றின் மூலம் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் உலக வங்கியின் அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் வளர்ச்சி பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்திய நிலையில் உலக வங்கியின் கணிப்புகள் மூலம் புதிய முதலீடுகள் குவியவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

ஜூலை - செப்டம்பர் காலாண்டு

ஜூலை - செப்டம்பர் காலாண்டு

கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 13.5 சதவீதமாக இருந்தாலும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதமாக மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

உலக வங்கி

உலக வங்கி

இதேபோல் நடப்பு நிதியாண்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இந்த நிலையில் உலக வங்கி தனது முந்திய இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீடான 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

உலக வங்கி

உலக வங்கி

இதேவேளையில் அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது. இந்தியா, உலகின் பிற நாடுகளைப் போலவே, பொருட்களின் விலை உயர்வு மற்றும் உலகளவில் மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கையை இறுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது பாதிப்புக் குறைவு

இந்தியா மீது பாதிப்புக் குறைவு

ஆனாலும் பிற வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய பொருளாதார மந்தநிலை இந்தியாவில் மிகக் குறைந்த தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ்

எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ்

சமீபத்தில் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் (2023-24) 6.5 சதவீதமும் வளர்ச்சியடையும் என எஸ்&பி செப்டம்பர் மாதம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பணவீக்கத்தை அதன் இலக்கு வரம்பான 2% முதல் 6% விட அதிகமாக இருக்கும் நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தித் தனது வட்டி விகிதங்களை உயர்த்திய காரணத்தாலும் பொருளாதாரம் வளர்ச்சி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மந்தமாக இருக்கிறது.

மந்த நிலை

மந்த நிலை

உலக நாடுகள் மந்த நிலைக்குத் தள்ளப்படுவதால் இந்திய தயாரிப்புகளுக்கான டிமாண்ட் குறைந்து உற்பத்தி, ஏற்றுமதி, வேவைவாய்ப்பு, வர்த்தக வாய்ப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+