இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!

இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த குரு பெயர்ச்சி அத்தனை சிறப்பாக அமையவில்லை போல. மத்திய அரசு என்ன எல்லாமோ செய்து பார்த்தும் பொருளாதாரம், தன் போக்கில் சரிந்து கொண்டே இருக்கிறது. இந்த சரிவுக்கு எப்போது பிரேக் போடுவார்கள், எப்போது இந்தியப் பொருளாதார பழைய படி, மேல் நோக்கி நல்ல வளர்ச்சி காணும் என்று தெரியவில்லை.

இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!

நேற்று நவம்பர் 2019-ம் மாதத்துக்கான Consumer Price Inflation என்று அழைக்கப்படும் நுகர்வோர் பணவீக்கம் வெளியானது. கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பர் 2019-ம் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. அதே போல நவம்பர் 2019-ம் மாதத்துக்கு உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.

நேற்றே அக்டோபர் 2019 மாதத்துக்கான Index of Industrial Production என்று அழைக்கப்படும் தொழில் துறை உற்பத்தி தரவுகளும் வெளியாயின. அக்டோபர் 2019 மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி -3.8 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.

இதற்கு எல்லாம் முன்பே வந்த ஜிடிபி தரவுகள், இன்று வரை இந்திய பொருளாதாரம் தொடர்பான மேக்ரோ செய்திகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. செப்டம்பர் 2019 காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 4.5 சதவிகிதமாக வளர்ச்சி சரிந்து இருப்பதை மறக்க முடியாது. இத்தனை கடுமையான சூழலில் இந்தியப் பொருளாதாரம் மற்றும் மத்திய அரசுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் வகையில் வர்த்தகப் பற்றாக்குறை விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்றுமதி - இறக்குமதி = வர்த்தகப் பற்றாக்குறை அல்லது வர்த்தக உபரி.
விளக்க வேண்டும் என்றால் 1. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்தால் அது வர்த்தக உபரி. 2. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்தால் அது வர்த்தகப் பற்றாக்குறை.

நவம்பர் 2019 மாதத்துக்கான வர்த்தகப் பற்றாக்குறை 12.12 பில்லியன் டாலராக குறைந்து இருக்கிறது. நவம்பர் 2018-ல் வர்த்தகப் பற்றாக்குறை 17.58 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2019-ல் கச்சா எண்ணெய் இறக்குமதி 11.06 பில்லியன் டாலர் மட்டுமே செய்திருக்கிறார்கள். நவம்பர் 2018-ல் கச்சா எண்ணெய் இறக்குமதி 13.52 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+