சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் இருக்கிறது. இந்நிலையில் 2100 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் சீன பொருளாதாரத்தை மிஞ்சி இருக்கும் என அமெரிக்க தொழிலதிபரான ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார். சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் அமெரிக்க தொழில்துறையின் முக்கியமான நபருமான ஜான் சேம்பர்ஸ் எக்னாமிக் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் இந்திய பொருளாதாரம் குறித்து பல்வேறு பாசிட்டிவான தகவல்களை பகிர்ந்துள்ளார். புதுமை மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மிகச் சிறந்த வளர்ச்சி அடையும் என ஜான் சேம்பர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவு சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவு மேலும் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கொண்டிருப்பதற்கே விரும்புகின்றனர் எனக் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது என்றும் அதன் காரணமாகவே மக்கள் அவருக்கு மூன்றாவது வாய்ப்பை தந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைத்திருப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றன என தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் முன்னணி பொருளாதாரமாக உருவாகும் எனக் கூறியுள்ளார்.
நடப்பு நூற்றாண்டின் இறுதிக்குள் இந்திய பொருளாதாரம் சீன பொருளாதாரத்தை மிஞ்சிவிடும் என அவர் கணிப்பு தெரிவித்துள்ளார். அடுத்த 30 - 40 ஆண்டுகாலத்தில் இந்திய பொருளாதாரம் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது சீனாவை விட 90% உயர்ந்த பொருளாதாரமாக இந்தியா மாறும் என தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இந்திய அரசும் , தொழில் நிறுவனங்களும் கவனம் செலுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நூற்றாண்டுக்கான நாடாக இந்தியா மாறும் என்றும் அதற்கு ஏற்ற வகையில் பொருளாதார திட்டங்களை கொண்டு வர வேண்டிய சவாலான பணி மோடி அரசுக்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications