இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ X கணக்கில் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேல் நாட்டின் தாக்குதல் அமெரிக்காவிடன் உதவியுடன் நடக்கும் காரணத்தால் ஈரான் பெரிய அளவில் தாக்குதலை செய்யும் என எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய எச்சரிக்கையை இஸ்ரேல் நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு விடுத்துள்லது.
தற்போது நிலவும் பாதுகாப்பு அச்சம் காரணமாக இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் உஷாராக இருக்குமாறு, இஸ்ரேல் அரசு மற்றும் ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் (Home Front Command) வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர்கள் தங்கள் வசிப்பிடம் அல்லது பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு இடங்களை (shelters) நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவற்றுக்கு அருகில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
அவசர நிலை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை 24 மணி நேர ஹெல்ப்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: +972-54-7520711; மின்னஞ்சல்: [email protected]. இந்திய தூதரகம் இஸ்ரேல் பாதுக்காப்பு துறை அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தேவையான புதுப்பிப்புகளை தொடர்ந்து வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இஸ்ரேலில் வேலை செய்யும் அல்லது படிக்கும் பல இளைஞர்கள் உள்ளனர். இஸ்ரேலில் உள்ள தமிழக இளைஞர்கள் பாதுகாப்பு இடங்களை அறிந்து கொள்ள வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications