புது வருடம், புது பிரச்சனை உடன் துவங்குகிறது.. உஷாரா இருந்தா அதிர்ஷ்டம் உங்க பக்கம்..!!

2023 ஆம் ஆண்டு முடியப்போகிறது, இந்த ஆண்டு மாத சம்பளக்காரர்கள் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளனர். எப்போதும் இல்லாமல் அதிகப்படியான பணிநீக்கம், சம்பள உயர்வு கட், சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட நிறுவனத்திலும் மிகவும் குறைவான சம்பளம், பதவி உயர்வு மறுப்பு. இதைத் தாண்டி மாத சம்பளக்காரர்களின் சேமிப்பை மொத்தமாகச் சாப்பிட்ட பணவீக்கம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் ஊழியர்கள் மத்தியில் முக்கியமான ஆய்வை அமெரிக்காவின் பிரபல பாஸ்டன் கண்சல்டிங் குரூப் நிறுவனம் நடத்தியது, இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு உண்மை வெளியாகியுள்ளது.

புது வருடம், புது பிரச்சனை உடன் துவங்குகிறது.. உஷாரா இருந்தா அதிர்ஷ்டம் உங்க பக்கம்..!!

பாஸ்டன் கண்சல்டிங் குரூப் அக்டோபர் 6 முதல் 30 ஆம் தேதி வரையில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 8 நாடுகளில் சுமார் 11000 ஊழியர்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் சுமார் 28 சதவீதம் பேர் கூறிய பதில் தான் அதிர்ச்சியை அளித்துள்ளது.

11000 ஊழியர்களில் சுமார் 28 சதவீதம் பேர் தாங்கள் தற்போது பணியாற்றும் நிறுவனம் தங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதால் அடுத்த வருடம் தங்களுடைய பணியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். அதாவது இந்த 8 முக்கியப் பொருளாதார நாடுகளில் நான்கு பேரில் ஒருவர் பணியை மாற்றுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் இந்தியாவில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 26 சதவீத ஊழியர்கள் தங்களுடைய பணியை மாற்ற விரும்புவதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

இது நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலியாக மாறப்போகிறது, காரணம் 100 பேர் கொண்ட நிறுவனத்தில் 28 பேர் ராஜினாமா செய்தால் நிறுவனத்தின் உற்பத்தி அளவு அல்லது செயல்திறன் அளவு கட்டாயம் பாதிக்கும். இதனால் ஊழியர்கள் நலனில் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்போது வேலைவாய்ப்பு சந்தை சர்வதேச அளவில் மந்தமாக உள்ளது, இது அடுத்த சில மாதங்களில் மாற அனைத்து விதமான சாத்தியங்களும் உள்ளது. இதில் முக்கியமாக அடுத்த 3 மாதத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகியவை தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

வட்டியைக் குறைத்தால் முதலீட்டு சந்தைக்கு அதிகளவிலான பணம் வரும், இதனால் வர்த்தகம், வேலைவாய்ப்பு, விரிவாக்கம் அதிகரிக்கும். இதன் சங்கிலி ரியாக்ஷனாகப் புதிய வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் 2024ல் அதிகப்படியான ஊழியர்கள் தங்களுடைய வேலையை மாற்றுவார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+