கொரோனா தொற்று இந்தியாவில் துவங்கிய நாள் முதல் பெரும்பாலான நிறுவனங்கள் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டது. முதலில் 3 மாதம் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2020 முழுவதும் ஊழியர்கள் வீட்டில் இருந்து தான் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் மொத்த ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலை வரலாற்றில் இதுதான் முறை என்பதால், பலருக்கும் பல விதமான அனுபவம்.
ஆனா இந்த Work From Homeஆல் ஊழியர்களுக்குச் சராசரியாக மாதம் 5,520 ரூபாய் அளவிலான பணம் சேமிக்கப்படுகிறது..!!
Work From Home
இந்திய ஊழியர்களுக்கு Work From Home அறிவிக்கப்பட்ட பின்பு சராசரியாக ஒரு ஊழியர் மாதம் 5,520 ரூபாயம், தினமும் பயணத்தின் மூலம் 1.47 மணிநேரம் சேமிக்கின்றனர் எனக் கோவொர்க்கிங் ஸ்பேஸ் நிறுவனமான Awfis செய்த ஆய்வுகள் கூறுகிறது.
ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தகவல்களை ஒருங்கிணைத்து ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது.
வசதி
இந்த ஆய்வில் ஈடுப்பட்ட 74 சதவீதம் பேர் வீட்டில் இருந்த பணியாற்றும் நிலையில் எங்கு வேண்டுமானாலும் இருந்து பணியாற்றும் வசதி உள்ளது அதாவது சொந்த ஊர், விடுதி இன்னும் பல வசதியான இடங்கள். இதேபோல் தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் செலவும், நேரமும் பெரிய அளவில் மிச்சமாகும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிலும் பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் தினசரி பயணத்திலேயே ஊழியர்கள் குறைந்தது 2 முதல் 4 மணிநேரம் செலவு செய்து வருகின்றனர்.
சேமிப்பு
மேலும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட 20 சதவீத ஊழியர்கள் மாதம் 5,000 முதல் 10,000 ரூபாய் வரையிலும், 19 சதவீதம் பேர் 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகை சேமிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதோடு 40 சதவீத ஊழியர்கள் தங்களது வீடு மற்றும் அலுவலகத்திற்குமான பயண நேரத்தைப் பெரிய அளவில் சேமிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
44 நாள்
இந்த ஆய்வு குறித்து Awfis நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ கூறுகையில், ஊழியர்கள் work from home செய்வதால் சேமிக்கப்படும் பயண நேரத்தைக் கணக்கிட்டால் 100 பேர் கொண்டு ஒரு அலுவலகத்திற்கு வருடத்திற்குக் கூடுதலாக 44 நாள் வேலைநாள் கிடைக்கும். இந்தக் கூடுதல் 44 நாட்களுக்கு வேலைநாட்களுக்கு நிறுவனம் எவ்விதமான பணமும் செலவு செய்யத் தேவையில்லை என்பதே கூடுதல் சிறப்பு.
7 நகரங்கள்
Awfis நிறுவனம் இந்த ஆய்வை நாட்டின் 7 பெரு நகரங்களில் சுமார் 2 மாதங்களுக்குத் தோராயமாக 1000 ஊழியர்கள் மத்தியில் ஆய்வு செய்துள்ளது.
மேலும் 75 சதவீதம் ஊழியர்கள் தங்களது பணியையும், வேலை நேரத்தையும் சிறப்பான முறையில்
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications