சர்வதேச அளவிலான நிறுவனங்களான கூகுள் அல்லது அமேசான் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்கள், மிக மோசமான பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளன. இந்த பணி நீக்க அறிவிப்புகள் பலவும் முன் கூட்டியே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும் திடீரென அறிவிக்கப்பட்டது.
டெக் நிறுவனங்களின் இந்த அறிவிப்பினால் இந்திய டெக் ஊழியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் இவர்கள் ஹெச் 1பி விசா வைத்துள்ளவர்களாவர்.
60 நாட்களில் வேலை பெறணும்
அவர்கள் விசாவை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் 60 நாட்களில் வேலையை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
லிங்க்ட் இன் பதிவொன்றில் கூகுளில் டெக்னிக்கல் புரோமோகிராம் மேனேஜராகப் பணிபுரிந்த மோனாம்பிகா, திடீரென பணி நீக்கம் செய்யப்படுவது மிகவும் கடினமானது. எங்களின் ஒட்டுமொத்த குழுவும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெறும் 10 மாதம்
திடீரென பணி நீக்கம் செய்யப்படுவது என்பது மிக மோசமான ஒன்று. தன்னுடைய குழு உறுப்பினர்களிடம் இருந்து கூட எனக்கு விடைபெறும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை. அவள் 10 மாதங்கள் மட்டுமே நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
12,000 பேர் பணி நீக்கம்
கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது கொரோனா காலகட்டத்தில் பெரியளவிலான ஊழியர்களை பணியமர்த்திய நிலையில், தற்போது தேவையானது குறைந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதிய வேலை
கூகுளின் இந்த பெரும் பணி நீக்கத்திற்கு பிறகு பல ஊழியர்களும் தங்களது லிங்க்ட் பக்கத்தில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு பதிவிட்டு வருகின்றனர். பலரும் லிங்க்ட் பக்கத்தில் வாய்ப்புக்காக பதிவினை செய்து வருகின்றனர். பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய வேலையினை தேடி வருகின்றனர்.
16 ஆண்டுகள் பணி புரிந்தேன்.
கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஊழியரான ஜஸ்டின் மூர் என்ற முன்னாள் ஊழியர் ஒருவர், நிறுவனம் தன்னை நள்ளிரவில் பணி நீக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதே ரிச்சர்ட் ஹே என்ற மற்றொரு பணியாளர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில், 15.5 ஆண்டுகள் கூகுளில் பணி புரிந்ததாகவும், திடீரென நள்ளிரவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட்
கூகுள் நிறுவனம் மட்டும் அல்ல, மைக்ரோசாப்ட் நிறுவனமும் 10,000 பேரை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பெரியளவில் இருந்த தேவைக்கு மத்தியில் பணியமர்த்தல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆப்பிள்
இந்த காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனமும் பணி நீக்கம் செய்யவில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வருவாய் அழைப்பின் போது பிப்ரவரியில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனியும் தொடரலாம்
எனினும் இந்த பணி நீக்க நடவடிக்கைகள் இனியும் சில மாதங்களுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட போகிறார்களோ தெரியவில்லை. எனினும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வது, புதிய வேலைகளை எளிதில் பெற உதவும் எனலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications