இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள் வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய மாட்டோம் என கூறுகின்றனர் என வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவு பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய இந்தியாவை சேர்ந்த முன்னாள் ஐஐடி மாணவர் ஒருவர் 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்வதற்கு இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள் தயாராக இல்லை என எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வருண் உம்மாடி என்பவர் கரக்பூரில் உள்ள ஐஐடியில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அவர் தற்போது அமெரிக்காவில் கிகா எம்எல் என்ற ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
சான் பிரான்சிஸ்கோவை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர் இந்தியாவை சேர்ந்த பொறியாளர்களை விமர்சனம் செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் உள்ள தங்கள் நிறுவன அலுவலகத்திற்கு பொறியாளர்கள் வேண்டி விண்ணப்பம் கோரப்பட்டதாகவும் இதில் விண்ணப்பம் செய்த பலரும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்வதற்கு தயாராக இல்லை எனக் கூறியுள்ளார்.
ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் தருகிறோம் எனக் கூறினாலும் பலரும் கடினமாக உழைப்பதற்கு தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 3 முதல் 8 ஆண்டுகளுக்குள் மட்டுமே பணி அனுபவம் கொண்ட பல பொறியாளர்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை என்றவுடன் எங்கள் நிறுவனத்தில் சேருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
ஒரு பயனர் வாரத்தில் இரண்டு நாட்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் ஒதுக்க வேண்டும் என நினைப்பது சாதாரணம்தானே இதை ஏன் நீங்கள் தவறாக பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். நீங்கள் ஊழியர்களுக்கு வொர்க் லைஃப் பேலன்ஸ் என்பது இருக்கக் கூடாது என நினைக்கிறீர்களா என சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் தற்போது இருக்கும் இளைஞர்கள் சம்பளத்தை பெரிதாக பார்ப்பதில்லை இந்த வேலையில் தங்களுக்கு முன்னேற்றம் இருக்கிறதா இந்த வேலை தங்களுக்கு மன அமைதியை தருகிறதா என்பதையும் பார்க்கின்றனர் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
நீங்கள் ஏன் ஒரு நபருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து வேலைக்கு தேர்வு செய்கிறீர்கள், அதனை இரண்டாக பிரித்து இரண்டு பேரை வேலைக்கு எடுத்தால் வேலை சிறப்பாக நடக்குமே என ஒரு பயனர் யோசனை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications