தற்போது வேலைக்கு செல்லக்கூடிய இளைஞர்கள் பலருக்குமே சுயமாக தொழில் செய்து முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவ்வாறு இருந்தாலும் குடும்ப சூழல் மற்றும் பல்வேறு நிதி சார்ந்த பொறுப்புகள் பெரும்பாலான இளைஞர்களை தங்களுடைய சுய தொழில் என்ற நோக்கத்தை நோக்கி செல்ல விடுவதில்லை . சில ரிஸ்க் எடுத்து சுய தொழிலில் இறங்கி வெற்றி பெற்று மற்ற அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்கள்.
அப்படி ஒரு இளைஞர் நல்ல சம்பளத்துடன் ஜெர்மனியில் தான் பார்த்து வந்த வேலையை விடுத்து தற்போது தோசை விற்பனை கடையை நடத்தி வருகிறார். இதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லை என்பது தான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான கதை . வெளிநாட்டவர்களுக்கு இந்திய உணவுகள் மீது எப்போதுமே பிரியம் அதிகம். குறிப்பாக தோசை, இட்லி போன்றவற்றை விரும்பி உண்பார்கள்.

இதனை அடிப்படையாக கொண்டு Dosamaa என்ற தோசை விற்பனை கடையை திறந்து சாதித்து காட்டியுள்ளார் மோகன், பாரீஸ் மற்றும் லண்டன் நகரங்களை தொடர்ந்து தற்போது புனேவில் தன்னுடைய கடையை நிறுவி இருக்கிறார். தோசாமா தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரக்கூடிய ஒரு தோசை விற்பனை பிராண்டாக மாறி வருகிறது. இதன் உரிமையாளர் மோகன் இந்தியாவை சேர்ந்த ஐடி நிபுணர்.

மோகன் அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து ஜெர்மனிக்கு சென்றார் .அங்கே திறம்பட வேலையும் பார்த்து வந்தார் ஆனால் அந்த அதிக சம்பளம் நல்ல வேலை இவை அனைத்துமே அவருக்கு நிம்மதியை தரவில்லை . எனவே சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கினார் .அப்படி அவர் தொடங்கிய நிறுவனம் தான் தோசாமா . தற்போது பாரீஸ் மற்றும் லண்டன் உள்ளிட்ட இடங்களில் வெற்றிகரமாக செயல்படக்கூடிய தோசை விற்பனை நிறுவனம் இது.
மோகன் இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து இருக்கிறார்.அதில் நான் ஜெர்மனியில் பார்த்து வந்த நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை தோசை சுடுவதற்காக விட்டுவிட்டேன் என தொடங்குகிறார் . அதாவது நான் மோகன், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். பாரீஸில் பட்டப்படிப்பை முடித்தவன், intel உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன் என கூறுகிறார்.
இறுதியாக ஜெர்மனியில் நல்ல சம்பளத்தோடு நல்ல பையனாக வேலை பார்த்து வந்தேன் அதன் பின்னர் அந்த வேலையை விடுத்து என்னுடைய சொந்த உணவகத்தை திறந்தேன் .அதுதான் தோசாமா எனக் கூறியிருக்கிறார். என்னுடைய நண்பர்களோடு இணைந்து தோசை கடையை தொடங்கினேன் .அது வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இந்த வெற்றி அத்தனை எளிதாக கிடைக்கவில்லை எத்தனையோ இரவுகள் தூங்காமல் விழித்திருக்கிறேன் என கூறியிருக்கிறார் . உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் குளூட்டன் ஃப்ரீ தோசை விற்பனை செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய எண்ணம் என தெரிவித்திருக்கிறார் .
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications