டெல்லி: இந்தியாவில் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.எனவே நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் கார்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் சீனா இதற்கும் நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டது.
அரிய வகை காந்தம்: எலக்ட்ரிக் ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிப்பில் பேட்டரியில் தொடங்கி அதன் பல்வேறு பாகங்களிலும் அரிய வகை காந்தத்தின் தேவை இருக்கிறது. இந்த காந்தங்களை வெட்டி எடுத்து தரம் பிரித்து வாகனங்களுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி தரக்கூடிய தொழில்நுட்பம் சீனர்களுக்கு தான் தெரியும். இதனால் தான் உலகம் முழுவதும் 90 சதவீதத்திற்கும் அதிகமான இந்த வகை அரிய காந்தங்களை சீனாவே சப்ளை செய்து வருகிறது.

சீனாவின் செயலால் வாகன உற்பத்தி பாதிப்பு: ஆனால் பல்வேறு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தக மோதல் காரணமாக சீனா இந்த அரியவகை காந்தங்களின் சப்ளையை நிறுத்தி வைத்திருக்கிறது. கிட்டதட்ட ஏப்ரல் மாதத்தில் இருந்து சீனா இந்த அரியவகை காந்தகளை ஏற்றுமதி செய்யாமல் தடுத்து வைத்திருக்கிறது. இதனால் உலகம் முழுவதுமே ஆட்டோமொபைல் துறை ஸ்தம்பித்து போய் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன .
பஜாஜ் ஆட்டோ: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் மேலாண் இயக்குனரான ராஜீவ் பஜாஜ் எக்கனாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் சீனா இந்த அரியவகை காந்தங்களின் சப்ளையை நிறுத்தியதால் தங்களுடைய மின்சார வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஆகஸ்ட் மாதத்தில் எங்களுடைய உற்பத்தியை முற்றிலும் நிறுத்தும் அளவிற்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்டில் உற்பத்தி நின்றுவிடும்: இந்தியாவில் பண்டிகை காலங்கள் தொடங்க இருக்கின்றன. விநாயகர் சதுர்த்தி ,ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் வர இருக்கின்றன. பண்டிகை காலத்தில் வாகன விற்பனை அதிகரிக்கும். இப்படி டிமாகாலம் என கூறலாம் இந்த காலத்தில் தங்கள் நிறுவனத்தில் மின்சார வாகன உற்பத்தி குறைந்திருக்கிறது ஆகஸ்ட் மாதத்தோடு நின்று விடும் அபாயமே ஏற்பட்டிருக்கிறது என ராஜீவ் பஜாஜ் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சிக்கலில் வாகன உற்பத்தி: அண்மையில் தான் தங்களுடைய சேடக் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனமான கோகோ ஆகியவை விற்பனையில் ஒரு கணிசமான சந்தையை பிடிக்க தொடங்கியது, தற்போது இந்த வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் சூழலில் இவற்றை உற்பத்தி செய்ய முடியாமல் இந்த அறிய வகை காந்தங்கள் கிடைக்காமல் தவிக்கிறோம் என கூறியிருக்கிறார். இந்த மாதமே தங்களுடைய உற்பத்தி பாதி அளவுக்கு குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் தற்போதைய நிலைமை நீடித்தால் ஆகஸ்ட் மாதத்தில் எங்களுடைய உற்பத்தி முற்றிலும் நின்றுவிடும் என கூறியுள்ளார்.
மாற்று ஏற்பாடு சாத்தியமா?: அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். வேறு இடங்களிலிருந்து இவ்வகை காந்தங்களை கொள்முதல் செய்யலாம் ஆனால் அது உடனடியாக நடப்பதாக தெரியவில்லை என தெரிவித்திருக்கிறார். வேறு இடத்தில் இருந்து இவ்வகை அரிய காந்தங்களை கொள்முதல் செய்து வாகனங்களை உற்பத்தி செய்வது அதிக விலை கொண்டதாக மாறும், உற்பத்தி விலை அதிகரிக்கும் போது நேரடியாகவே வாகனங்களின் விலையும் உயரும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications