இந்தியா மட்டுமல்ல, பொதுவாக எந்த ஒரு நாட்டுக்கும், ஏற்றுமதி தான் அந்நிய செலாவணியைக் கொட்டிக் கொடுக்கும் மிகப் பெரிய சோர்ஸ்.
இப்போது கொரோனா வைரஸ் பிரச்சனையால் உலகமே ஸ்தம்பித்து இருக்கிறது. அதனால் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் எல்லாமே அடி வாங்கி இருக்கிறது.
அதே போலத் தான் இந்தியாவிலும் ஏற்றுமதி சரிந்து இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் நடந்து இருக்கிறது.
என்ன விஷயம்
இந்தியாவின் ஏற்றுமதி, ஏப்ரலில் சரிவது ஓகே. ஆனால் வரலாறு காணாத வகையில் 60.28 சதவிகிதம் சரிந்து இருப்பது தான் மத்திய அரசுக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் ஒரு சின்ன கலக்கத்தைத் கொடுத்து இருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கிறது.
விவரம்
கடந்த ஏப்ரல் 2020-ல் இந்தியாவின் ஏற்றுமதி 10.36 பில்லியன் டாலராக சரிந்து இருக்கிறது. இது ஏப்ரல் 2019 விட 60.28 % சரிவாம். அதே போல ஏப்ரல் 2020-ல் இறக்குமதியும் 17.12 பில்லியன் டாலருக்கு தான் செய்திருக்கிறார்களாம். ஏப்ரல் 2019-ஐ விட 58.65 % சரிவாம். இது தான் வருத்தமான விஷயம்.
நல்ல விஷயம்
இந்த கெட்ட செய்தியிலும் நடந்த ஒரே நல்ல விஷயம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைந்தது தான். இதியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஏப்ரல் 2019-ல் 15.33 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஏப்ரல் 2020-ல் 6.76 பில்லியன் டாலராக சரிந்து இருக்கிறது.
லாக் டவுன்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு அறிவித்த லாக் டவுன் காரணத்தால் தான், ஏற்றுமதி படு பயங்கரமாக சரிந்து இருக்கிறது. அதோடு கொரோனாவால் சப்ளை செயினில் ஏற்றப்பட்ட சிக்கல்கள் மற்றும் டிமாண்ட் சரிவு எல்லாம் ஏற்றுமதியை நேரடியாக பாதித்து இருக்கின்றன.
1995-க்குப் பிறகு
ஏப்ரல் 2020-ல் இந்திய ஏற்றுமதி 60 % சரிந்து இருப்பது, கடந்த 1995-க்குப் பிறகு இந்தியா காணும் மிகப் பெரிய வீழ்ச்சி என பிசினஸ் டுடே பத்திரிகை தன் செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி சொன்னது போல, சோறு தண்ணி இல்லாமல் நிறைய மக்கள் இறந்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications