இந்தியாவுக்கு இது மிக மோசமான காலம் தான்.. காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பித்த காலத்தில் இருந்து, மூன்றாவது முறையாக லாகவுடன் 3.0 நீட்டிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இத்தோடு இது முடிவடைவதாகவும் தெரியவில்லை.

இதற்கிடையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்று தான் ஏற்றுமதி துறை.

நம் கண் முன்னே விவசாயிகளும், வியாபாரிகளும் பொருட்களை விற்க முடியாமல் குப்பைகளில் வீசி செல்வதை காண முடிகிறது.

தளர்வு கிடைக்கலாம்

தளர்வு கிடைக்கலாம்

அழுகி போன பழங்கள், மலை போல் குவிந்து கிடக்கும் பொருட்கள், இதே ஆட்டோமொபைல் துறை, ஜவளித் துறை என பலவும் முடங்கிப் போயுள்ளன. அதிலும் லாக்டவுன் மூன்றாவது முறையாக அமல்படுத்தப்பட்ட பின்னரும், சில துறைகளுக்கு தளர்வுகளை அளிக்கலாம். இது பொருளாதாரத்தினை மேம்படுத்த சற்று உறுதுணையாக இருக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்றுமதியாளர்களுக்கு மோசமான காலம்

ஏற்றுமதியாளர்களுக்கு மோசமான காலம்

ஆனால் இது ஏற்றுமதியாளர்களுக்கு மோசமான காலமாகவே கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் தெளிவு இல்லாமை, பணப்புழக்கம் ஆகியவை நாட்டின் ஏற்றுமதி வேகத்தினை பின்னுக்கு தள்ளிவிட்டன. மேலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் வேலையாட்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையிலும் லாகிஸ்டிக்ஸ் செலவுகளும் குறையவில்லை என்றும் கூறப்படுகிறது.

செலவுகள் அதிகரிப்பு

செலவுகள் அதிகரிப்பு

தோட்டக்கலை நிறுவனமான ஐஎன்ஐ பார்ம்ஸின் தலைவரும், நிர்வாக இயக்குனரும், பங்கஜ் காண்டேல்வால் அதன் போர்ட்போலியோவில் 85% ஏற்றுமதி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது லாக்டவுனால் தனது செயல்பாடுகள் முழுவதும் முடங்கியுள்ளது. அதோடு அறுவடையும் தடைபட்டுள்ளது. இது எல்லாவற்றையும் விட ஏற்றுமதி செலவுகள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளதாகவும் கூறியவர், இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிக மோசமான காலம் என்றும் கூறியுள்ளார்.

சரமாரியாக ஏற்றம் கண்ட விமான கட்டணம்

சரமாரியாக ஏற்றம் கண்ட விமான கட்டணம்

குறிப்பாக விமான கட்டணங்கள், கடல் வழி கட்டணங்கள், சாலை மற்றும் ரயில் சரக்கு போக்குவரத்து அனைத்தும் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு விமான வழியாக சர்வதேச சரக்குகள் கொண்டு செல்ல கட்டணங்கள் 200 - 300% வரை அதிகரித்துள்ளன. இதே கடன் வழியாக செல்லும் சரக்குகளுக்கு கட்டணம் 50 - 100% வரை உயர்ந்துள்ளன.

விமான சேவை நிறுத்தம்

விமான சேவை நிறுத்தம்

தேவை மற்றும் விநியோகத்தில் உலகளாவிய இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், உலகளவில் மற்றும் இந்தியாவில் விநியோகச் சங்கிலி செலவு ஒரு கவலையாகிவிட்டது. தளவாடங்களின் செலவுகள் தேவை மற்றும் விநியோக அடிப்படையில் செய்யப்படுகின்றன. மேலும் தற்போது உலகளவில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படவில்லை. எனினும் இந்த மாத இறுதிக்குள் சிறிது தளர்வு காணப்படும் என்றும் நம்புகிறோம்.

நிலைமை எப்போது சீரடையும்

நிலைமை எப்போது சீரடையும்

மேலும் கொரோனா பரவல் காரணமாக ஒரு சில அத்தியாவசிய பொருட்களை தவிர, மற்ற பொருட்களுக்கு தேவை அதிகம் இல்லை என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் தான் நிலைமை சீரடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+