கொரோனா பாதிப்பால் இந்திய உற்பத்தி சந்தை வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், வெளிநாட்டு ஏற்றுமதி செய்யும் அளவிலான உற்பத்தி நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை.
இதுமட்டும் அல்லாமல் இந்தியப் பொருட்களுக்கான தேவையும் வெளிநாடுகளில் மிகவும் குறைவாக உள்ளது, இதற்கு உலக நாடுகளின் பொருளாதாரச் சூழ்நிலையிலும் முக்கியக் காரணமாகவும்.
2020-21ஆம் நிதியாண்டில் நாட்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையை அக்டோபர் மாதம் அடைந்துள்ளது. இக்காலகட்டத்தின் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 5.12 சதவீதம் சரிந்து வர்த்தகப் பற்றாக்குறையில் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இந்தியாவில் ஏற்றுமதி சரியவும், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கவும் என்ன காரணம் தெரியுமா..?
ஏற்றுமதி பொருட்கள்
அக்டோபர் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பெட்ரோலியம் பொருட்கள், ரத்தின கற்கள் மற்றும் நகைகள், தோல் மற்றும் இன்ஜினியரிங் பொருட்கள் அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே நாட்டின் ஏற்றுமதி அளவு கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் 5.12 சதவீதம் சரிந்துள்ளது.
கணிப்பு
அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி அளவு 5.4 சதவீதம் வரையில் சரியும் என வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைப்பு கூறிய நிலையில் 5.12 சதவீத சரிவை மட்டுமே இந்தியா பதிவு செய்துள்ளது.
இதனால் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு கணிக்கப்பட்ட அளவான 8.78 பில்லியன் டாலரை விடவும் 8.71 பில்லியன் டாலராக உள்ளது.
இறக்குமதி
இக்காலகட்டத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவும் 11.53 சதவீதம் வரையில் சரிந்துள்ள காரணத்தினால் மட்டுமே நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை பெரிய அளவிலான சரிவைச் சரிவை எதிர்கொண்டுள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் அக்டோபர் மாதம் தங்க இறக்குமதி 35.88 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி 16.12 சதவீதம் அதிகரித்துள்ளது.
6 மாத தொடர் சரிவு
இந்தியாவின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 5.12 சதவீதம் சரிந்திருந்தாலும், கொரோனா பாதித்த நிலையில் கடந்த 6 மாதம் தொடர் சரிவில் இருந்த ஏற்றுமதி சந்தை செப்டம்பர் மாதம் முதல் முறையாக உயர்வடைந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 30 துறைகளில் 20 துறை ஏற்றுமதியில் உயர்வைக் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications