சாட்ஜிபிடி, டீப்சீக் பயன்படுத்தாதீங்க.. நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய உத்தரவு..!!

இந்திய நிதியமைச்சகம், அரசு ஊழியர்களுக்கும், அரசு தொடர்பான பணிகளை செய்ய அரசு வழங்கிய கணினிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) டூல்ஸ் மற்றும் பயன்பாடுகளை பயன்படுத்துவதை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 29, 2025 தேதியிட்ட அறிக்கையில், அரசு தரவுகளுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரதீப் குமார் சிங் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், அரசு கணினிகளில் AI சேவைகளை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ChatGPT உள்ளிட்ட பல்வேறு AI சேவைகளை பயன்படுத்தும் போது ஒருவர் உள்ளீடும் கேள்விகளை வெளிநாட்டு சர்வர்களின் செயலாக்கப்பட்டு பதில்கள் கிடைக்கிறது. இதனால் அரசு தரவுகள் கசிவு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சாட்ஜிபிடி, டீப்சீக் பயன்படுத்தாதீங்க.. நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய உத்தரவு..!!

இந்த அபாயங்களைத் தவிர்க்க, அரசு வழங்கிய கணினிகளில் AI கருவிகளை பயன்படுத்துவதை அனைத்து ஊழியர்களும் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நிதிச் செயலாளர் கையெழுத்திட்ட இந்த அறிக்கை வருவாய், பொருளாதார விவகாரங்கள், செலவினங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், DIPAM மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட முக்கிய அரசு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய நிதியமைச்சகத்திற்குள் AI சேவைகளை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சத்தை நிதியமைச்சகத்தின் நடவடிக்கை எடுத்துரைக்கிறது.

இந்திய அரசு மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் ஏஐ சேவைகளை அரசு கருவிகளில் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது. இதேபோல் பல பன்னாட்டு நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டு உள்ளனர்.

அரசு கருவிகளில் AI கருவிகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் இந்த அறிவிப்புக்கு மத்தியில், இந்திய வேலைவாய்ப்பு தளத்தில் AI இன் மாறிவரும் நிலையையும், அரசு நிறுவனங்களுக்குள் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தெளிவான மற்றும் விரிவான கொள்கைகளை உருவாக்குவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+